கைத்துப்பாக்கியை தடைசெய்ய கனேடிய மக்கள் ஆதரவு!

கைத்துப்பாக்கியை தடைசெய்வது அவசரமான தேவையென கனடாவின் வின்னிபெக் நகர மக்கள் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் அதிகரிக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களைத் தொடர்ந்து கையடக்கத் துப்பாக்கியை தடைசெய்வது தொடர்பாக மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இந்நிலையில், கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இணையவளி கருத்துக்கணிப்புக்கு அறிவித்தல் விடுத்திருந்தார்.

அதன் பிரகாரம், வின்னிபெக் நகரின் பெருமளவான மக்கள் குறித்த தடைக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். 25 வீதமானோர் மட்டுமே அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த வாக்கெடுப்பு குறித்து கருத்துத் தெரிவித்த வின்னிபெக் பல்கலைக்கழக குற்றவியல் தொடர்பான விரிவுரையாளர் Michael Weinrath, கைத்துப்பாக்கியை தடைசெய்வதோடு, பொதுமக்களிடம் காணப்படும் ஏனைய துப்பாக்கிகளையும் தடைசெய்ய வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கைத்துப்பாக்கியை தடைசெய்ய வேண்டுமென பெண்களும் வயதானவர்களுமே வாக்களித்துள்ளனர். ஆண்கள் வாக்களித்துள்ளமை குறைவாகும். கைத்துப்பாக்கியை தடைசெய்வது பெண்களுக்கு நேரடியாக பயனளிக்குமென்பதை இந்தக் கருத்துக் கணிப்பு காட்டுவதாக விரிவுரையாளர் Michael Weinrath, மேலும் தெரிவித்துள்ளார்.

ரொறொன்ரோவில் கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததோடு, 13 பேர் காயமடைந்தனர். அதன் பின்னரும் பல்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகின. இதன் பின்னணியில் கைத்துப்பாக்கியை தடைசெய்வது குறித்து கனேடிய அரசாங்கம் பரிசீலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018