பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக தொடக்கப்பட்ட வீ டு இயக்கம்!

ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடங்கிய மீ டு இயக்கத்தைப் போன்று, தற்போது பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் வீ டு மென் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர். 

கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுவது மீ டு. தமிழ் சினிமாவின் பின்னணிப் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று பல அடுக்கடுக்கான புகார்களை கொடுத்துள்ளார். சின்மயியைத் தொடர்ந்து பல நடிகைகளும், நாங்களும் பாலியல் ரீதியாக பாதிப்பிற்குள்ளானோம் என்று கூறி வருகின்றனர்.

உதாரணமாக நடிகை அமலா பால், வரலட்சுமி சரத்குமார், தனுஸ்ரீ தத்தா, அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் உள்பட பலரும் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது, ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடங்கிய மீ டு இயக்கத்தைப் போன்று, தற்போது பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களும் வீ டு மென் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து திரைப்பட இயக்குனரும், பத்திரிக்கையாளருமான வாராகி கூறுகையில், ”பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம். இதில், நடிகர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என்று 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சேர்ந்துள்ளனர்.

ஆண்கள் மீது விருப்பம் ஏற்பட்டு அவர்களுடன் பழகி வரும் பெண்கள் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டதும், அவர்கள் மீது பாலியல் புகார் கொடுக்கின்றனர். சிலர், பணத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தொடர்ந்து இது போன்ற புகார்களை அனுமதித்து வந்தால், ஆண்களுக்கு என்று ஒரு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக இது போன்ற புகார்களை ஏற்பது தொடர்பாக உரிய வழிமுறைகளை பின்பற்ற உச்சநீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வக்கீல் அருள்துமிலன் பொதுச்செயலாளர் வக்கீல் மதுசூதனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள்துமிலன், பொதுச்செயலாளர் மதுசூதனன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

” மீ டு இயக்கம் சார்பில் கொடுக்கப்படும் புகார்களின் உண்மை தன்மையை அறிந்த பின்பு காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்பு, குற்றம் சாட்டப்பட்டவரது புகைப்படம், பெயர், முகவரி ஆகியவற்றை வெளியிட வேண்டும். அதுவரையில், குற்றம்சாட்டப்பட்டவரது பெயர், முகவரி, புகைப்படம் போன்றவற்றை வெளியிட தடை விதிக்க வேண்டும். 

தொடர்ந்து பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு என்று தேசிய ஆண்கள் ஆணையம் அமைத்து அதன் மூலம், ஆண்கள் சந்திக்கும் சமூக பிரச்சனைகளை முறையிட வழிவகை செய்ய வேண்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில், கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018