இந்திய எல்லையில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

இந்திய கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். கரை திரும்பிய மீனவர்கள் இந்திய எல்லையில் கூட தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் குற்றம் சாட்டியுள்ளனர். 12 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது.

கடந்த 12 நாட்களாக டீசல் மற்றும் இதர கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம்  மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி போராட்டத்தை கைவிட்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். 

கச்சத்தீவு அருகே நேற்று இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது, 10 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையை காட்டி அவர்கள் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.  இதனால் மீன்பிடிக்க சென்ற 100கும் மேற்பட்ட மீனவர்கள்உயிருக்கு பயந்து கடலில் வீசிய வலையை வெட்டி விட்டு மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினரின் இந்த செயலால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும்  வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநில, மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி எந்தவித பாதிப்பும் இல்லாமல் மீனவர்களை கடலில் மீன்பிடிக்க செய்ய வேண்டும் என்பது ராமேஸ்வரம் மீனவர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019