பூத் ஏஜெண்டாக வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில், நடிகை கீர்த்தி சுரேஷ் பூத் ஏஜெண்டாக வேலை பார்ப்பது போன்ற வீடியோ இடம் பெற்றுள்ளது. 

தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள சர்கார் படம் தொடர்ந்து சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. ஆரம்பமே இந்த டீசரில் விஜய்யைப் பற்றி வரலட்சுமி சரத்குமார் ஓபனிங் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. எந்த நாட்டுக்கு போனாலும், தன்னை எதிர்ப்பவர்களை அழித்துவிட்டு தான், அந்த நாட்டை விட்டு வெளியேறுவார். அவர் இப்போது இந்தியா வந்திருக்கிறார்.

ஒரு நிமிடம் 33 வினாடிகள் இருக்கும் இந்த டீசர் வீடியோவில், தளபதி விஜய் ஓட்டு போடுவதற்காக வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வருகிறார். அப்போது, நான் எந்த கம்பெனியையும் விலைக்கு வாங்க வரவில்லை. இன்றைக்கு என்ன நாள். Election Day….எனது வாக்கை நான் பதிவு செய்ய வந்திருக்கிறேன் என்று கூறி ஓட்டு போட செல்கிறார். அவர் ஓட்டு போட செல்லும் வாக்குச் சாவடியில் பூத் ஏஜெண்டாக கீர்த்தி சுரேஷ் வேலை பார்க்கிறார். 

கள்ள ஓட்டு:

கீர்த்தி சுரேஷ் மூலமாக, தனது ஓட்டு கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளதை விஜய் அறிகிறார். அதன் பிறகு ஒவ்வொரு முறையும், இது போன்ற கள்ள ஓட்டாக பதிவு செய்யப்படுவதை தடுக்க புதிய முயற்சி மேற்கொள்கிறார். இவருக்கு உடந்தையாக கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். 

மாவட்ட ஆட்சியர்: 

இப்படத்தில் விஜய் உடன் இணைந்து நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார் மாவட்ட ஆட்சியராக நடித்துள்ளார். தனது ஓட்டு கள்ள ஓட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியரான வரலட்சுமியிடன், தளபதி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் எடுத்துச் செல்கின்றனர்.

இதற்கு எடுக்கப்படும் முயற்சியின் போது வரலட்சுமி செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் வரலட்சுமி உயிரிழக்க, தனது முயற்சியை தொடர்ந்து மேற்கொள்கிறார். மேலும், தமிழகத்தில் மாற்றத்தை மேற்கொள்ள அவர் கொண்டு வரும் அதிரடி மாற்றங்கள் தான் சர்கார். 

இன்னும் ஒரு நாள்:

ஒரு விரல் புரட்சியை மையப்படுத்திய இன்னும் ஒரு நாள். இந்த நாளில் என்ன என்ன மாற்றங்கள் நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்த பாருங்கள். ஏனென்றால், நான் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என்று விஜய் கூறுகிறார். 

பின்னணி இசை: 

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது. 

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019