மட்டக்களப்பில் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வு, மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு நகர காந்தி பூங்கா முன்றலில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் உருவ படத்திற்கு, மாலை அணிவிக்கப்பட்டு ஈகசுடர் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நிகழ்வின் இறுதியில், படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென ஏற்பாட்டாளர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாநகர் முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் எஸ்.நிலாந்தன், மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்க தலைவர் எ.செல்வேந்திரன், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய தலைவர் சிவயோகநாதன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மயில்வாகனம் நிமலராஜன், யாழ்ப்பாணத்தை தளமாக்க கொண்டு இயங்கிய ஊடக நிறுவனமொன்றின் முன்னணி ஊடகவியலாளர் ஆவார். கடந்த 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

அருணாசலம் லோகநாதன்
அருணாசலம் லோகநாதன்
காரைநகர் சக்கலாவோடை
உருத்திரபுரம், கிளிநொச்சி
25.04.2019
Pub.Date: April 26, 2019
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
திருமதி கயிலாயர் சரோஜினிதேவி
யாழ். சாவகச்சேரி
கனடா
24 APR 2019
Pub.Date: April 25, 2019
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019