அமெரிக்காவில் குறையும் கிரீன் கார்டுகள்!

அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்காக காத்திருப்பவர்களில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசு அண்மையில் வெளியிட்டுள்ள தகவலின்படி, “கடந்த ஆண்டில் 60,394 பேருக்கு அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்குவதற்கான கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் அமெரிக்காவிலேயே தங்கிப் பணிபுரியலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அனைத்துத் தரப்பினருக்கும் அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிய முன்பைப் போல கிரீன் கார்டு வழங்கப்படுவதில்லை. அதிகத் திறமை மிக்க நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பித்த 6 லட்சத்துக்கும் அதிகமானோர்களில் 60,394 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் 23,569 பேருக்கு ஹெச்.1பி விசா அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் 64,116 கிரீன் கார்டுகள் வழங்கப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டில் 64,687 பேர் கிரீன் கார்டு பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதக் கணக்குப்படி 6,32,219 பேர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். கிரீன் கார்டு பெற்றவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி 25 ஆண்டுகள் முதல் 92 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கலாம்.

Ninaivil

திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
திருமதி பிறேமலதா சுந்தரலிங்கம்
யாழ். புங்குடுதீவு
அவுஸ்திரேலியா
23 JAN 2019
Pub.Date: January 23, 2019
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
திருமதி குணபூசனி அம்மா கந்தசாமி (லீலா)
யாழ். மானிப்பாய
கனடா, நோர்வே
21 JAN 2019
Pub.Date: January 22, 2019
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019