குயின்டன் டி கொக்கை அடுத்து ஷிகர் தவானை குறிவைக்கும் மும்பை!

இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் ஷிகர் தவானை வாங்குவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி திட்டமிட்டுள்ளது.


ஏற்கனவே, 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் ஐ.பி.எல். போட்டிக்காக தென் ஆபிரிக்க வீரர் குயின்டன் டி கொக்கை பெங்களூர் அணியிடம் இருந்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியது.

கடந்த 2018 ஐ.பி.எல். போட்டியின் போது தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் குயின்டன் டி கொக்கை ஏலத்தில் 2.8 கோடி ரூபாய் கொடுத்து றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வாங்கியது. தற்போது அதே விலைக்கு குயின்டன் டி கொக்கை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

பெங்களூர் அணி இதற்காக குயின்டன் டி கொக்கை விடுவித்துள்ளது என ஐ.பி.எல். வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த பரிமாற்றத்துக்காக பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிஸூர் ரஹ்மானை 2.2 கோடிக்கும், இலங்கை சுழற்பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவை 50 லட்சதிற்கும் மும்பை இந்தியன்ஸ் விடுவித்துள்ளது.

எவின் லீவிஸுடன் இணைந்து குயின்டன் டி கொக் ஆடுவது மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை தரும். குயின்டன் டி கொக்கை ஏற்கெனவே டில்லி, ஹைதராபாத் அணிகள் பங்கேற்று விளையாடியுள்ளார்.

மொத்தம் 34 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடிய அவர் 1 சதம், 6 அரை சதங்களுடன் மொத்தம் 927 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் ஷிகர் தவானை வாங்க மும்பை இந்தியன்ஸ் அந்த முடிவு செய்துள்ளமை அணிக்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018