தொலைக்காட்சியில் கால்பதிக்கும் ஸ்ருதிஹாசன்- ’ஹலோ சகோ’ விரைவில்..!!

கமல்ஹாசனை தொடர்ந்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்த விளம்பர வீடியோ வெளியாகி, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த 2017ல் ஒளிப்பரப்பான பிக்பாஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு டிரென்ட் செட்டராக அமைந்தது. அதை தொடர்ந்து ஒளிப்பரப்பான பிக்பாஸ்-2 நிகழ்ச்சியும் அமோக வரவேற்பை பெற்றது. 

இதன் காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர்கள் வட்டம் அதிகரித்திருப்பதை உணர்ந்த பல டிவி நிறுவனங்கள், புத்தம் புதிய கதைக்கருவில் ரியாலிட்டி ஷோக்களை தயாரித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, சமூக பிரச்னைகளை அலசும் நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோன்ற கருவில், மற்றொரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சியை நடிகை வரலக்ஷ்மி தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர்களை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசனின் மகளும், தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகியாக வலம் வருபவருமான ஸ்ருதிஹாசன், விரைவில் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். 

தற்போது இந்த நிகழ்ச்சிக்கான விளம்பர வீடியோவை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ’ஹலோ சகோ’ என்ற பெயரில் ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சி, பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்பட நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக உள்ள ஸ்ருதி ஹாசன் தொலைக்காட்சியில் கால்பதிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதற்காக ஸ்ருதிக்கு, அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018