நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஹெச்.ராஜா

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். 

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தலைமையில் நடைபெற்றிருக்கிறது. இந்த ஊர்வலம் செல்ல இருந்த பகுதியில் உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதாக அப்பகுதி போலீசார் ஊர்வலத்தைத் தடுத்துள்ளனர். 

இதையடுத்து, ஊர்வலத்தை தடுத்த போலீசாரை எதிர்த்து ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர் உயர்நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் வீடியோவாக பரவியதைத் தொடர்ந்து, புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது போலீசாரை அவதூறாக பேசியது, உயர் நீதிமன்ற உத்தரவை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹெச்.ராஜா 4 வாரத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு புகாரை நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் அமர்வு தாமாக முன்வந்து விசாரிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், செல்வம் அமர்வு விசாரணைக்கு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதைத் தொடர்ந்து, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா இன்று நேரில் ஆஜரானார். நான் பேசியது தவறு என்று உணர்ந்தேன் என்றார். இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018