கடந்த 24 மணி நேர விபத்துக்களில் நால்வர் பலி

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்து சம்பவங்கள் நேற்று நண்பகல் 12 மணிக்கும்  இன்று 12 மணிக்கும் இடைப்பட்ட பாலப்பகுதியில்   பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. . 

அத்துடன் மேற்படி விபத்து சம்பவங்கள் குருநாகல், பல்லம, மாறவல மற்றும் அலவெல்ல ஆகிய பகுதிகளிலேயே பதிவாகியுள்ளது.

மோட்டார்சைக்கிளுடன் தொடர்புடைய  விபத்துக்களில் குருநாகல்  . பல்லம, மாறவல  ஆகிய பகுதிகளில் பதிவாகியுளளதுடன்  20 ,27  மற்றும் 57 வயதுடைய மூவர் உயிரிழந்துள்ளனர்.  

அதன்படி குருநாகல் பகுதியில் நேற்று காலை 11.20 மணியளவில் தொறட்டியாவ - மல்லவபிட்டிய வீதியில் மல்லவில பகுதியிலிருந்து  தொறட்டியாவ பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிர்திசையில் பயணித்த வேன் மோதி  விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.    

உயிரிழந்தவர் தொறடியாவ பகுதியை சேர்ந்த  57 வயதுடைய முதுறன் வெலியலாகே நந்தசேன எனப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அத்துடன், பல்லம பகுதியின் கிரியன்கல்லிய அதிகம அதுறு வீதியின்  தெவால சந்தியிலிருந்து வில்பத்து  பகுதியை நோக்கி  பயணித்த சைக்கிள் ஒன்றுடன் எதிர்திசையில் பயணித்த    மோட்டார் சைக்கிள்  மோதுண்டமையினால்  விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த சைக்கிள் ஓட்டுனரான  27 வயதுடைய யட்டவறசந்தி பகுதியை சேர்ந்த  யட்டவற பத்தகே  சிறிபால எனப்படுபவர்   முன்தலம வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மேலும் , மாறவில பகுதியில் நேற்று  இரவு 8.20 மணியளவில்  தெமடபிடிய பகுதியிலிருந்து சிறிகமபல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும் எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர்  மோதி  விபத்துக்குள்ளானதில் 20 வயதுடைய லுணுவில பகுதியை சேர்ந்த வர்ணகுலசூரிய தில்ஷான் லக்மால் பிரநாந்து  எனப்பவர்  உயிரிழந்துள்ளார். 

அத்துடன் அலவெல்ல  - கிரியுல்ல வீதியின்   அலவெல்ல  பகுதியிலிருந்து  கிரிஉல்ல பகுதியை நோக்கிபயணித்த முச்சக்கரவண்டி  கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதியமையினால் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த கிரிஉல்ல பகுதியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி சாரதி  கிரிஉல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர்  அலவெல்ல பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பமுணு ஆராச்சி பதிரணலாகே றணசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக  குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் , மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018