2018 சர்வதேச சமுத்திர மாநாடு

காலி உரையாடல் – 2018 சர்வதேச சமுத்திர மாநாடு ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் இன்று  முற்பகல் கொழும்பில் ஆரம்பமானது.

பாதுகாப்பு அமைச்சும் இலங்கை கடற்படையும் இணைந்து ஒன்பதாவது தடவையாக ஏற்பாடு செய்திருக்கும் இம்மாநாடு “சமுத்திர முகாமைத்துவத்திற்கு ஒன்றிணைந்து பணியாற்றுதல்” என்ற கருப்பொருளின் கீழ் (Synergizing for collaborative maritime management) இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறுகின்றது.

ஐம்பது நாடுகள் மற்றும் 17 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சமுத்திர பாதுகாப்பு தொடர்பான உள்நாட்டு, வெளிநாட்டு நிபுணர்கள் பலரும் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

வலய மற்றும் வலயம் சாராத கடற்படையினர் பாதுகாப்பு மற்றும் சமுத்திர அமைப்புகளின் தொழில் வல்லுனர்கள் தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கான தளத்தை இம்மாநாடு வழங்குகின்றது.

சமுத்திர வளங்களை உரிய முறையிலும் அனைத்து நாடுகளினதும் தேவைக்கேற்பவும் பயன்படுத்துதல், வலய பாதுகாப்புக்கான அதன் முக்கியத்துவம், எமது நாட்டின் பொருளாதார இருப்பு, உலக சமாதானத்திற்கான அதன் பயன்பாடு மற்றும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான இருதரப்பு, பல்தரப்பு உறவுகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இம்மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.

தற்போதைய சமுத்திர சவால்களை வெற்றிகொள்வதற்கு வினைத்திறன்மிக்க பொறிமுறையொன்றை தாபிப்பதற்கும் வலய நிபுணர்களின் சமுத்திர பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை கண்டறிவதற்கும் இம்மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

காலி உரையாடல் மாநாட்டின் புதிய தகவல்களை www.galledialogue.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த இணையத்தளத்தின் மூலம் ஒக்டோபர் மாதம் 22 - 23ஆம் திகதிகளில் இம்மாநாட்டை நேரடியாக பார்வையிடுவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதிக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்கவினால் விசேட நினைவுச் சின்னமொன்று வழங்கிவைக்கப்பட்டது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்புத் துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018