ஓன்றுக்காக மற்றொன்றை விட்டுக்கொடுக்க முடியாது; சுமந்திரன் திட்டவட்டம்

அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஓன்றுக்கான மற்றொன்றை விட்டுக்கொடுக்க முடியாது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலையடுத்து ஊடகவியலாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா. வில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறித்து கருத்து வெளியிடுகையில், 

2015 இல் இலங்கை அரசாங்கம் வாக்குறுதிகள் வழங்கிய போது செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் ஐ.நா. வில் உரையாற்றினார். அந்த உரை நான்கு தூண்களின் அடிப்படையிலானவை.

முதலாவது தூண் உண்மை கண்டறியப்பட வேண்டும். என்பதாகும். இரண்டாவது நட்டயீடுகள், கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். மூன்றாவது நீதி வழங்கப்பட வேண்டும் என்பதாகும். நான்காவது இனி நிகழாமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதாகும். 

இந்த நான்கும் முழுமையாக நடைபெற வேண்டும். நான்கில் ஒன்று மற்றதுக்கு மாற்றீடாக அமைய முடியாது. உண்மை கண்டறியப்பட வேண்டியது முக்கியமான விடயம். 

நீதி நிலைநாட்டப்படுவது காலதாமதப்படுத்தக் கூடாது. மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதம் தேவையில்லை என்று சொல்ல முடியாது. அதனடிப்படையில் உண்மை கண்டறியப்படுவதற்கான பொறிமுறை கண்டறியப்பட்டால் நாம் வரவேற்போம் என்றார். 

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019