கூட்டமைப்புக்கும், ஜே.வி.பிக்கும் நன்றி: கொள்ளைக்கார ஆட்சி வெளியேற வேண்டும்

பங்காளிகளாக இல்லாமல் ஜனநாயக பங்காளிகளாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பிக்கு நன்றி தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வுக்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,“நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரில் 122 உறுப்பினர்கள் பெரும்பான்மையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தியுள்ளோம்.

இதை புரிந்து கொண்டு ஜனநாயகம் தொடர்பாக துளியளவேணும் மரியாதை இருக்குமேயானால் கொள்ளைக்கார ஆட்சி வெளியேறி ஆக வேண்டும்.மஹிந்த தொடர்ச்சியாக தேசபக்தி, நாட்டு மக்கள், தேசியம் சம்பந்தமாக வகுப்பெடுத்துக்கொண்டு இருக்கின்றார்.

தேசபக்தி, நாட்டு மக்கள், தேசியம் இவை அனைத்தும் ஆரம்பமாவது நாட்டின் அடிப்படை சட்டமான அரசியலமைப்பை மையமாக கொண்டே.. ஆகவே இந்த அரசியலை மதிக்கத் தெரிய வேண்டும்.அந்த வகையில் எமது ஆட்சி மீண்டும் இன்று சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.

இதை உருவாக்குவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியோடு, பங்காளிகளாக இல்லாமல் ஜனநாயக பங்காளிகளாக இருந்து ஒத்துழைப்பு வழங்கிய கூட்டமைப்புக்கு நன்றி.இதே போன்று மற்றுமொரு ஜனநாயக பங்காளிகளாக இருந்த ஜே.வி.பிக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018