இலங்கை அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் அழுத்தங்கள் : உலக தமிழர் பேரவை

இலங்கை அரசாங்கத்தின் மீது தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்குமாறு உலக தமிழர் பேரவை சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் நீதிமன்றம் நேற்று வழங்கிய இடைக்கால தடையுத்தரவு காரணமாக அரசியலமைப்பு பிரச்சினை மேலும் தீவிரமாவது தடுக்கப்பட்டுள்ளதாக உலக தமிழர் பேரவை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.இலங்கையின் நாடாளுமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டது.

பிரதமர் மற்றும் சபாநாயகரை கலந்தாலோசிக்காமல் மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துமையானது, ஜனநாயக விரோத செயற்பாடாகும்.எனவே, இந்த தீர்மானத்தை தாம் கண்டிப்பதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இந்த தீர்மானம் அரசியலமைப்புக்கு அப்பாற்ப்பட்டு எடுக்கப்பட்டது.இதற்கு முன்னதாக மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். இது சட்டவிரோத அதிகார பரிமாற்றமாகும். இலங்கையின் ஜனநாயகம் அரை ஜனநாயகமாக மாறியுள்ளது.

அத்துடன் ஜனநாயகப்பண்புகள் மற்றும் கலாசாரங்கள் அற்ற நிலையில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. தற்போது அங்கு ஆள் எண்ணிக்கையை வைத்து விளையாட்டுக்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் சிறுபான்மையினர் தொடர்பான அக்கறை இல்லாமை காரணமாக இலங்கையில் கடந்த காலங்களில் அதிக விலையை கொடுக்கவேண்டியிருந்தது.தொடர்ந்தும் அரசியல் அதிகாரப்பரவலாக்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அத்துடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமை மீறல் விடயங்களில் அரசியல் கலைக்கப்பட்டுள்ளது.இது நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு பாதகமாகவே அமையும் என்றும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar