குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – வெளியானது முக்கிய புள்ளிவிபரம்!

குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ரொறன்ரோவின் அண்மைய புள்ளிவிபரங்களை ரொறன்ரோ மாவட்ட பாடசாலைகள் சபை வெளியிட்டுள்ளது. அந்த புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே மாணவர்களின் உடல் உள திறன் குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததுடன் ஒப்பிடுகையில் தற்போது குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வகையில் மாணவர்களின் உடல் ஆராக்கியம் மற்றும் உளவளத் திறன் என்பன கடந்த ஐந்து ஆண்டுகளில படிப்படியாக குறைவடைந்து வந்துள்ளமை தெரியவருகிறது.

2,20,000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரம் தொகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் உளவளத் திறனானது 69 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும், 7ஆம் வகுப்பு மாணவர்களின் உளவளத் திறன் 87 சதவீதத்தில் இருநது 80 சதவீதமாக குறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் கடந்த 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 7இலிருந்து 12ஆம் வகுப்பு வரையான மாணவர்களின் இயல்பான உடல் வளச் செயற்பாடுகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்கள் வயதாகும் போது சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதாகவும், இவர்களில் ஆண்களை விடவும் பெண்களே அதிக நேரத்தை இணையத்தில் செலவிடுவதாகவும் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018