70 வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம்

இன்று மத்திய கிழக்கு பிராந்தியம் உள்ள நிலையில், உலகில் முதன் முதலில் மனித உரிமை பிரகடனம், மத்திய கிழக்கு நாடான ஈராக்கில், ஈரான் மன்னரினால் கிறிஸ்துவுக்கு முன் 539ம் ஆண்டு "சைறஸ் மனித உரிமை பிரகடனமாக' (Cyrus Charter of Human Rights) உருவாக்கப்பட்டது என்பதை யாரும் நம்புவார்களா?  

கிறிஸ்துவுக்கு முன் 539ம் ஆண்டு, இன்று ஈரான் என்றழைக்கப்பட்ட முன்னைய பாரசீகத்தின் போர்வீரார்கள், அன்று மெசப்பத்தேனியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கிற்குள் சென்று, அங்கு பல தலைமுறையாக அடிமை வாழ்க்கை வாழ்ந்தவர்களை, விடுதலை செய்த பொழுது, பாரசீக மன்னன் மெசப்பத்தேனியாவின் நகரான பாபிலோனியாவிற்கு சென்று, அங்கு எழதப்பட்ட பிரகடனத்தை, "சைறஸ் மனித உரிமை பிரகடனமாக' உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

21ம் நூற்றண்டின் வளர்ச்சியான - உலகின் நவீனா நாகரீகம், விஞ்ஞான தொழில்நுட்ப காலச்சாரம் யாவும் புதிய யுகமாக மாறிக் கொண்டு வரும் இவ்வேளையிலே, மத்திய கிழக்கு நாடுகளான – ஈரான், ஈராக், ஏகிப்த், சிரியா, லிபியா போன்ற பல நாடுகள் மனித நாகரீகத்தில் பின்னடைந்து கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

"சைறஸ் மனித உரிமை பிரகடனம் மூலம் ஆரம்பாமான மனித உரிமை பிரகடனம், கால வளர்ச்சியினால் வேறுபட்ட வடிவங்களை கொண்டு, 1945ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்துடன், 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் திகதி, பிரான்சின் தலைநகரான பாரிஸில், சாளியோற் மண்டபத்தில் ஐ. நா பொதுச்சபை கூடியபோது நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமை பிரகடனம், (Universal Declaration of Human Rights – UDHR) இன்று 70 வருடங்கள் ஆகியுள்ளது.

ஐக்கிய நாடுகள்சபையினால் மனித உரிமை பிரகடனம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையில், இலங்கை ஐ.நா.வில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை.

சர்வதேச மனித உரிமை

இவ் சர்வதேச மனித உரிமை பிரகடனம், முப்பது சாரங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில், முதலாவது சாரம் - சுதந்திரமாக பிறக்கும் மனிதர்கள் யாவரும் சமமானவர்களெனவும் மதிப்பையும் நியாயத்தையும் கொண்டவர்களெனவும் கூறுகின்றது. இரண்டாவது சாரம், -இன, மத, மொழி, பால், நிறம், அரசியல் வேறுபாடுமின்றி, சமூக வேறுபாடுமின்றி இப்பிரகடனம் சகலருக்கும் உரித்தானதாக கூறுகின்றது.

அடுத்து (3-21) மூன்றிலிருந்து இருபத்தொன்று வரை உள்ள சாரங்கள், மனிதர்களின், சிவில் அரசியல் உரிமைகளை (Civil and Political Rights) உள்ளடங்கியுள்ளது. இவை பாதுகாப்பு, அடிமைத்தனம், சித்திரவதை, சட்டத்தின் முன்னால் சமத்துவம், வேறுபாடு, அடிப்படை உரிமைகள், கைது, நீதி, நிரபராதி, அரசியல் தஞ்சமும் துன்புறுத்தல், திருமணம், சொத்துரிமை, சிந்தனை உரிமை, பேச்சு சுதந்திரம், தகவல் பரிமாற்ற உரிமை, ஒன்று கூடும் சுதந்திரம் போன்றவற்றை அடக்கியுள்ளன.

சாரங்கள், (22-27) இருபத்திரண்டிலிருந்து இருபத்தி ஏழு வரை, மனிதர்களின், சமூக பொருளாதார கலாசார உரிமைகளை (Economic, Social and Cultural Rights)  உள்ளடக்கியுள்ளது. இவை வேலை, உடை, உணவு, தங்குமிடம், மருத்துவ பராமரிப்பு, கல்வி போன்ற உரிமைகளை கொண்டுள்ளது. இறுதி சாரங்களான (28-30) இருபத்து எட்டிலிருந்து முப்பதுவரை, சாதனத்தின் நடைமுறை, பொறுப்பு உரிமை பற்றி கூறுகின்றது.

சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை பொறுத்தவரையில் ஜக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நூற்று தொன்றிரண்டு (194) அங்கவத்துவ நாடுகளும் தமது தலையாய கடமையாக ஏற்றுகொள்கின்றன.

அடக்குமுறை

இலங்கைத்தீவில் கடந்த ஏழுபது வருடத்திற்கு மேலாக அடக்குமுறையுடன், முப்பது வருடகால பாரிய யுத்தத்தை எதிர் கொண்ட தமிழ் மக்கள் - யுத்தத்தின் பின்னரும் தொடர்ந்து சொல்லானத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

யுத்தவேளையில் - தமிழ் மக்கள் இடப்பெயர்வு, ஏறிகாணை தாக்குதல்கள், விமான தாக்குதல், நீண்டகால பொருளாதாரத் தடை, உணவு மருந்து தட்டுப்பாடுகள் போன்ற கஷ்டங்களை அனுபவித்தனர். யுத்தம் முடிந்த வேளையில் இராணுவத்திடம் சரண் அடைந்த மக்கள், போரளிகள் எதிர்நோக்கிய கஷ்டங்கள், தற்பொழுது எதிர்நோக்கும் கஷ்டங்கள் யாவும் மிக சொல்லில் அடங்காது. இன்று தடுப்புகாவலில் உள்ள அரசியல் கைதிகளான போராளிகள் நிலை, மிகவும் பரிதாபத்திற்குரியது.

பல நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள்ளார்கள். இவ் கொலைகள் எதுவும் இன்றுவரை ஒழுங்காக விசாரித்து நீதி வழங்கப்படவில்லை? சிறிலங்கா பற்றிய கேள்விகளும்  சந்தேகங்களும் தமிழ் மக்களிடையே மட்டுமல்லாது, சர்வதேச சமூகத்திடமும்  காணப்படுகிறது.  

தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களை பல தரப்பட்ட சர்வதேச மனித உரிமைகான அரங்குகளில் எடுத்துரைக்கப்பட்ட பொழுதிலும், மாறுபட்ட சிறிலங்க அரசுகளிடம் ‘செவிடன் காதில் ஊதிய சங்காகவே’ காணப்படுகிறது’.

ஐ. நா. அங்கத்துவ நாடுகளான சிறிலங்கா, சர்வதேச மனித உரிமை பிரகடனத்தை மட்டுமல்லாது, வேறுபட்ட ஐ. நா. பிரகடனங்களையும், உடன்பாடுகளையும் மதிப்பதில்லை.

தமிழ் மக்களுடைய தாயக பூமியான வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயம், சிங்கள மயம், இராணுவமயம் நடைபெறும் அதேவேளை, எந்தவித தடையுமின்றி தெற்கில் வாழும் சிங்களவர்கள் வடக்கு கிழக்கில் விரும்பியவாறு வெற்றிகரமாக தமது வர்தகத்தை செய்கின்றனர்.

1956ம் ஆண்டு சிங்களச் சட்டத்தை முன்னாள் ஜனதிபதி சந்திரிக்காவின் தகப்பானர் அன்று வெற்றிகரமாக நடைமுறைபடுத்தியதற்கும், 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முன்னைய ஜனதிபதி ராஜபக்ச, சிறிலங்காவின் தேசிய கீதத்தை, தமிழ் மக்கள் மீது சிங்களத்தில் தினித்தற்கும் இடையில் எதுவித வித்தியாசங்களும் இல்லை! ஆனால் பல ஒற்றுமைகள் காணப்படுகிறது. இவற்றிற்கு இவரது ஆட்சி காலம் நல்ல ஊதரணமாக விளங்கிறது.

சிங்களத் தலைவர்கள்

இனப்பிரச்சனையை பொறுத்தவரையில், சிங்களத் தலைவர்கள் யாரிடமும் எந்தவித மனமாற்றத்தையும் காணமுடிவதில்லை. பௌத்த பீடதிபதிகள் சிங்கள அரசியல் தலைவர்களிடையே சிந்தனையில் மாற்றம் இனிமேலும் ஏற்படுமா? என்ற கேள்விகளுடனேயே தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.

கடந்த போரில், ஏறக்குறைய இரண்டு லட்சம் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினால் கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை சில சிங்களப் பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்பதை மறுக்கவில்லை.

பாரீயளவில் பதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு வாழ் தமிழ்மக்ள்ள பற்றி அக்கறையற்ற சிறீலங்கா அரசு, தினமும் சிங்கள மக்களை வடக்கு - கிழக்கில் குடியேற்றுவதிலும், புத்தர்சிலைகளை தமிழர் தாயக பூமியில் நிறுவுவதில் காலத்தை கழிக்கின்றனர்.

ஆயுதப் போராட்டத்தை அழிப்பதில் சர்வதேச சமுதாயம் காட்டிய அக்கறையில், சரிபாதி கூட தற்பொழுது தமிழ் மக்களில் நலன்களில் கொண்டுள்ளார்கள்கா என்ற நிலையில் தமிழ் மக்களின் வாழ்க்கை செல்கிறது. உண்மை கூறுவதனால் சர்வதேச மனித உரிமைசாசனமோ சர்வதேச சட்டங்களோ தமிழீழ மக்களை இன்று கப்பாற்றுமா என்ற கேள்வி உருவாகியுள்ளது.

ஆகையால் தமிழீழ மக்களாகிய நாம் உள்நாட்டிலும் புலம்பெயர் வாழ்விலும், ஒன்றுபட்டு எமது இனத்திற்காக உழைக்க வேண்டும். இதை செய்ய தவறுவோமானால், இலங்கைதீவில் தமிழர்களது சரித்திரம் கூடிய விரைவில் முடிவிற்கு வந்தேறும்.

ஆகையால் நாம் ஒவ்வொருவரும், எமது இனத்திற்கு பயன்படக்கூடிய முறையில் இன்று என்ன செய்யப்போகிறோம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும். அடுத்து அதேபோல் ஒவ்வொருநாளும், இன்று எமது இனத்திற்கு எதை உருப்படியாக செய்தோம் என்பதையும் எண்ண வேண்டும். இதுவே எமது இனத்தின் விடுதலைக்கு வழிவகுக்கும். இரவு பகலான தொடர்ச்சியான வேலை திட்டத்தில் நாம் யாவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.  

எம்மில் பலரிடையே இயல்பாகவே எரிச்சல் பொறாமை தமது சுயலாபத்தின் அடிப்படையில் மற்றவர்களை இம்சிக்கும் தன்மை, தன்தோன்றி தனம் என்பவை காணப்படுகிறது. இன விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக நாடகம் ஆடி, எம்மிடையான ஐக்கியத்தை ஒற்றுமையை கபடமாக குழப்புவர்கள் தற்காலத்தில் உள்ளார்கள் என்பது வியப்பிற்குரிய விடயம் அல்லா! இவர்கள் சிறிலங்காவின் சிங்கள பௌத்தவாத அரசின் நிகழ்ச்சி நிரலிற்கு துணை போபவர்கள் மட்டுமல்லாது, இவர்களால் இவை தவிர்ந்த வேறு என்ன வேலை திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்ற கேள்வி இங்கு உருவாகிறது! எது எப்படியானாலும், இவர்களையும் மனித உரிமை சாசனங்கள், சர்வதேச ஒப்பந்தங்கள் பாதுகாக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா (முன்னைய இலங்கை) 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி ஐக்கியநாடுகள் சபையின் அங்கத்துவ நாடாக அனுமதிக்கப்பட்டது. ஐ. நாவின் சில உடன்படிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்ற பொழுதும் - மனித உரிமை விடயத்தில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட அரசாங்கங்களின் கூட்டணியிலேயே சிறிலங்கா கைகோர்த்து நின்று சர்வதேசரீதியாக தம்மை நியாயப்படுத்தி வருகிறது. 

ச. வி. கிருபாகரன்

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019