பாரதி தமிழச்சாதி

விதியே, விதியே, தமிழச் சாதியை

என்செய நினைத்தாய் எனக்குரையாயோ?

அழியாக் கடலோ?அணிமலர்த் தடமோ?

வானுறு மீனோ மாளிகை விளக்கோ?

கற்பக தருவோ? காட்டிடை மரமோ?

விதியே தமிழச்சதியை, எவ்வகை விதி;த்தாய்

முன்புநான் தமிழச்சாதியை அமரத்தன்மை

வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன்

ஒருபதி னாயிரம் சனிவாய்ப் பட்டு

தமிழச் சாதிதான் தன்நிலை தாழ்ந்து

ஆப்பிரிக்கத்து காப்பிரி நாட்டிலும்

தென்முனை யடுத்த தீPவுகள் பலவினும்

பூமிப் பந்தின் கீழ்புறத் துள்ள

பற்பல தீவீனும் பரவி யிவ்வெளிய

தமிழச் சாதி, தடியுதை யுண்டும்

காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்

வருந்திடும் செய்தியும் மாய்ந்திடும் செய்தியும்

பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது

செத்திடுங் செய்தியும் பசியாற் சாதலும்

பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்

நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்

இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்திலேன்

தெய்வம் மறவார், செயுங்கடன் பிழையார்

ஏதுதான் செயினும், ஏதுதான் வருந்தினும்

இறுதியில் பெருமையும் இன்பமுமு; பெறுவார்

என்பதன் னுளத்து வேரகழ்ந் திருத்தலால்

எனினும்

இப்பெருங் கொள்கை இதயமேற் கொண்டு

கலங்கிடா திருந்த எனைக்கலக் குறுத்தும்

செய்தியொன் றதனைத் தெளிவுறக் கேட்பாய்

ஊனமற்ற றெவைதான் உறினுமே பொறுத்து

வானம் பொய்க்கின் மடிந்திடும் உலகுபோல்

தானமும் தவமுந் தாழ்ந்திடல் பொறுத்து

ஞானம் பொய்க்க நசிக்குமோர் சாதி


உடலும் உள்ளமும் தம்வச மிலராய்

நெறிபிழைத் திகழ்வுறு நிலைமையில் வீழினும்

பெரிதிலை பின்னும் மருந்ததற் குண்டு

செய்கையும் சீலமும் குன்றிய பின்னரும்

உய்கைக் குரிய வழியேது முண்டோ?

நமது மூதாதையர் நயமுறக் காட்டிய

ஒழுக்கமும் நடையும் கிரியையும் கொள்கையும்

ஆங்கவர் காட்டிய அவ்வப் படியே

தழுவிடின் வாழ்வு தமிழர்க் குண்டு.


விதியே! விதியே!! தமிழச்சாதியை

என்செயக் கருதி இருக்கின்றாயடா?

Ninaivil

திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019