எம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்

தேவைகள் நிறைந்த எமது பகுதி மக்களின் நிலமையை கருத்திற் கொண்டு எம்மோடு இணைந்து பணியாற்றக் கூடியவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டுமென முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

சத்துணவு ஆலை திறப்பு விழாவும், போசனைக்கண்காட்சி நிகழ்வும் மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,”போர் முடிவடைந்த பின்னர் 2015 ம் ஆண்டு தேசிய கட்சிகள் இரண்டும் இணைந்து ஆட்சியமைத்தமையினால், சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தோன்றியது. ஆனால் அந்த நம்பிக்கை கடந்த 26ஆம் திகதியுடன் இல்லாமல் போய்விட்டது.

உலகிலேயே அமைச்சரவை இல்லாத, அமைச்சர்கள் இல்லாத ஒரு அரசாங்கத்தை இலங்கை வரலாற்றில் உருவாக்கிவிட்டார்கள். சிறுபான்மை மக்களுக்கு அரசியல் ரீதியாக விழுந்த பாரிய அடியாகவே ஜனாதிபதியின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில் அபிவிருத்தி தேவையில்லை என கூறிவிட்டு, நாங்கள் இருக்கமுடியாது. எமது முன்னாள் முதலமைச்சர் அதனைதான் கூறுகின்றார். என்னை பொறுத்தவரை இரண்டுமே முக்கியம். இல்லாவிடில் இங்கு அரசியல் தீர்வு கிடைக்கும் முன்னர் அபிவிருத்தி இல்லாமல் மக்கள் தமது பகுதிகளிலிருந்து  இடம்பெயர்ந்துவிடும் நிலை ஏற்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019
திரு பொன்னுசாமி விமல்காந் (விமல்)
திரு பொன்னுசாமி விமல்காந் (விமல்)
யாழ். பருத்தித்துறை
பிரான்ஸ்
06 MAR 2019
Pub.Date: March 14, 2019