ஐ.நா அறிக்கை சட்ட ரீதியற்றது; வசந்த பண்டார

ஐ.நா.வில் தயாரிக்கப்பட்ட அறிக்கை சட்ட ரீதியற்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

அவர் கூறுகையில்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகள் இணைந்து செயற்படும் விடயத்தில்  இலங்கையும் இணைந்தது. பிரேரணையொன்று ஐ.நா.வில் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வில் தயாரிக்கப்பட்ட அறிக்கை சட்ட ரீதியற்றது. சாட்சியங்களின் அடிப்படை நம்பகத் தன்மை கிடையாது.

அத்தோடு வெளிநாட்டு நிபுணர்கள் கையளித்துள்ள 4 அறிக்கைகளும் அடிப்படையற்றவை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கி சமஷ்டி முறையை ஏற்படுத்துவதை அடிப்படையாக வைத்தே இப் பிரேணை முன்வைக்கப்படுகின்றது.

இது நாட்டை பிளவுபடுத்தும். எனவே  அடிப்படையற்ற அறிக்கையை எதிர்த்து தேசிய இயக்கங்களின் ஒன்றியம் 160 பக்க அறிக்கையை தயாரித்தது.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் இளவரசர் செய்யிட் அல் ஹுசைனிடமும் 47 உறுப்பு நாடுகள் பிரதிநிதிகளிடமும் எமது 160 பக்க அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இன்று நடைபெறும் ஐ.நா. மனித உரிமை பொதுச் சபைக் கூட்டத்திற்கும் எமது அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது  என்றார்.

 

 

Ninaivil

திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
திரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)
யாழ். மண்கும்பானை
யாழ். நல்லூர்
16 JUL 2019
Pub.Date: July 17, 2019
திரு குழந்தை செல்லத்துரை
திரு குழந்தை செல்லத்துரை
மாத்தளை
முல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா
11 JUL 2019
Pub.Date: July 16, 2019
திரு சீனிவாசகம் சரவணபவன்
திரு சீனிவாசகம் சரவணபவன்
மலேசியா
யாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்
13 JUL 2019
Pub.Date: July 15, 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
யாழ். வண்ணார்பண்ணை
லண்டன்
10 JUL 2019
Pub.Date: July 12, 2019
திரு செல்வராசா சுபேன்
திரு செல்வராசா சுபேன்
யாழ். உரும்பிராய்
பிரான்ஸ்
29 JUN 2019
Pub.Date: July 11, 2019