வேந்தர் கோப்பை கிரிக்கெட் தொடர்- தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் முதல் முறையாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்படும் இப்போட்டித் தொடர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. 

துவக்க விழாவில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு டாஸ் போட்டு போட்டியை  தொடங்கி வைத்தார். விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

முதல் போட்டியில் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அணிகள் விளையாடின. இப்போட்டித் தொடரில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 16 பல்கலைக்கழகங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. இறுதிப் போட்டி பொங்கலுக்கு முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019