இலங்கை 19 வயதின் கீழ் அணியில் மொஹமட் சாமாஸ்

சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய 19 வயதின் கீழ் அணிக்கெதிரான 15 பேரைக்கொண்ட இலங்கை அணியின் பெயர்ப்பட்டியல் (2) வெளியிடப்பட்டது.

3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகள் உள்ளடங்களாக இடம்பெறவுள்ள இத்தொடருக்கு இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைவராக வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் துடுப்பாட்ட வீரர் நிபுன் தனஞ்சய அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் போட்டிகளுக்கான இலங்கை குழாமில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் மொஹமட் சாமாஸ் மீண்டும் பெயரிடப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நடைபெற்று முடிந்த பங்களாதேஷ் 19 வயதின் கீழ் அணிக்கெதிரான தொடரிலும் இடம்பெற்றிருந்த சாமாஸ் இத்தொடரிலும் தனக்கான இடத்தை தக்க வைத்தமை சிறப்பம்சமாகும்.

இவர்கள் தவிர துடுப்பாட்டத்தில் அண்மைக்காலமாக சிறப்பாக செயற்பட்டு வரும் காமில் மிஷார மற்றும் நவோத் பரணவிதான ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழாமில் இடம்பெற்றுள்ள வீரர்கள் 2020 இளையோர் உலகக்கிண்ண தொடருக்காக தகுதி பெறுவார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இப்போட்டிகளில் பங்கு கொள்ளும் அவுஸ்திரேலிய அணி கடந்த 31 ஆம் இலங்கை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள் பி. சரா ஓவல் மைதானத்தில் ஜனவரி 3,5 மற்றும் 7 ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளதுடன் டெஸ்ட் போட்டி 10-12 ஆகிய தினங்களில் SSC மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

நிப்புன் தனன்ஜய (தலைவர்),

நவோத் பரணவித்தாரன,

சோனால் தினுஷ,

காமில் மிஷார,

மொஹமட் சமாஸ்,

ரவீன் டி சில்வா,

தவீஷ அபிஷேக்,

அவிஷ்க தரிந்து,

லக்ஷான் கமகே,

சமிந்து விஜேசிங்க,

ப்ரவீன் நிமேஷ்,

டில்ஷான் மதுசங்க,

அஷான் டேனியல்,

ரொஷேன்சன்ஜய,

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019