ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மைத்திரி முடிவை அறிவிக்கவில்லை

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் தனது முடிவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவருடைய பெயர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழுவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நடத்திய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.பி. திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

எந்த தேர்தல் நடந்தாலும் அதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன இணைந்த பாரிய கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு முகம்கொடுக்க இருக்கின்றோம் என கூறியுள்ளார்.

அதனால் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது எமக்குப் பிரச்சினையில்லை என்றும் அதனை எமது கூட்டணியின் தலைவர்கள் உரிய நேரத்தில் பொருத்தமான ஒருவரை தெரிவுசெய்து மக்களுக்கு அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.

Ninaivil

திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
திருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)
யாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி
கொழும்பு, கனடா
22 APR 2019
Pub.Date: April 24, 2019
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019