ஆஸ்திரேலியா தொடர்: மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி டோனி அசத்தல்

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான எம்எஸ் டோனி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். 


ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் மகேந்திர சிங் டோனி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். இந்த தொடருக்கு முன் டோனியின் பினிஷிங் திறமை குறைந்துவிட்டது என விமர்சனம் கிளம்பியது.

ஆனால் டோனி விமர்சனம் குறித்து கவலைப்படாமல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார். சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 289 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (0), விராட் கோலி (1), அம்பதி ராயுடு (0) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் டோனி இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோகித் சர்மா 129 பந்தில் 133 ரன்கள் சேர்த்தார். டோனி 96 பந்தில் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரனகள் எடுத்து 34 ரன்னில் தோல்வியை சந்தித்தது. டோனி கூடுதலாக 45 பந்துகளை சந்தித்ததே தோல்விக்குக் காரணம் என விமர்சனம் எழும்பியது.

அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ரோகித் சர்மா 43 ரன்னிலும், தவான் 31 ரன்னிலும், அம்பதி ராயுடு 24 ரன்னிலும் ஆட்டமிழக்க 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

விராட் கோலி 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் இந்த முறை டோனி சிறப்பாக விளையாடி 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்தில் 55 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா (9), தவான் (23) சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 3-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 113 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி ஆட்டமிழந்தார். விராட் கோலி – டோனி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தது.

அடுத்து டோனியுடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். கேதர் ஜாதவை வழி நடத்திய டோனி சிறப்பாக விளையாடி 74 பந்தில் 3 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar