யாழ் புகையிரத விபத்தில் உயிரிழந்தவரை கால் விரலினை வைத்து அடையாளம் கண்டு கொண்ட மனைவி!


யாழ்ப்பாணம் நாவற்குழியில் தொடருந்து மோதி உயிரிழந்தவரை அவரது காலில் காணப்பட்ட மேலதிக விரல் அடையாளம் காண உதவியுள்ளது.நாவற்குழி தொடருந்து பாலத்தை அண்மித்த பகுதியில் தண்டவாளத்தில் நடந்து சென்றவரை பி.ப.2.00 மணிக்கு கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்து மோதியது.

கால்கள் மற்றும் முகம் ஆகியவை சேதமடைந்த நிலையில் அவரது சடலம் நாவற்குளி தொடருந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இரவு 8.00 மணி வரை அடையாளம் காணப்படாத நிலையில் சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் சடலத்தை ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் உயிரிழந்தவர் அணிந்திருந்த சாரத்தைக் கொண்டு வீடு வீடாகச் சென்றதில், இன்று காலை சாவகச்சேரி மருத்துவமனைக்கு வருகை தந்திருந்த அவரது மனைவி சடலத்தின் காலில் மேலதிக விரல் காணப்பட்டதையடுத்து உயிரிழந்தவர் தனது கணவர் என உறுதிப்படுத்தினார்.

நாவற்குழி 300 வீட்டுத் திட்டப் பகுதியைச் சேர்ந்த யோசப் கிங்ஸ்லி ( வயது 41 ) என்பவரே உயிரிழந்தவராவார்.இவரது இறப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.

அறிக்கையைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் இறப்பு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம், விசாரணைகளை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சாவகச்சேரி மருத்துவமனையில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் இறப்பு விசாரணை அதிகாரி மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும், உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர், சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸாரைப் பணித்துள்ளார் 

Ninaivil

திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019
திருமதி மீனலோஜனி வரதராஜா
திருமதி மீனலோஜனி வரதராஜா
மலேசியா
யாழ். சுன்னாகம் மயிலணி, Oman, கனடா Toronto
14 MAY 2019
Pub.Date: May 15, 2019
திருமதி நடராசா வசந்தகோகிலம்
திருமதி நடராசா வசந்தகோகிலம்
யாழ். சிறாம்பியடி
யாழ். வண்ணார்பண்ணை
14 MAY 2019
Pub.Date: May 14, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio
17 APR 2019
Pub.Date: May 13, 2019
திருமதி நிர்மலா செல்வநாயகம்
திருமதி நிர்மலா செல்வநாயகம்
யாழ். இளவாலை
கனடா
11 MAY 2019
Pub.Date: May 12, 2019