"அரசியல் கைதிகளை விடுதலை செய்..!"

வலியை தினம் சுமந்து

விழிநீர் சொரிய வீறுகொண்டு

விரைகிறது எம் இனம்!


உறவுகளை தேடியோடி

உண்ணாமல் உறங்காமல்

கண்களில் கனவுகளோடு

விழிநீர் கொண்டு பூத்தூவி

தம் உறவுகளுக்காய் காத்திருக்கும்

எம் மக்களுக்கு பதில் கூறு அரசே.


என் அப்பா நாளை வருவார்

என் கணவன் எப்போது வருவான்

என் மகன் என்னைப்பார்க்க

ஓடி வருவான்

என் ஆண் மகன் எனக்கு உழைத்தும் தருவான் - என


வயிறு நிறைய உண்ண உணவின்றி

உடுக்க உடையின்றி

காலம் முழுக்க ஓலைக் கொட்டிலிலும்

தறப்பாள் தட்டியிலும்

வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு

உயிருடன் தினம் தினம்

ஏக்கத்தோடு ஏம்பலித்துக்கொண்டிருக்கும்

 எம்மவர்களுக்கு பதில் கூறு அரசே....!


நல்லாட்சி பேசும் நலங்கெட்ட அரசே

நம்மவர்களின் நரக வேதனை

உனக்குப் புரியப்போவதில்லை.

ஐக்கியம் பேசி

அனியாயத்துக்கு விலைபேசி

சமநீதி கொடுத்துக் காப்பதாய் பிதற்றிக்கொண்டு திரிகிறாயே!


அரசியல் கைதிகளாய் எத்தனை இளைஞர்கள்

தம் இளமையைத் தொலைத்து

இனிமையான நாட்களை

சிறையினுள் புதைத்து

அம்மா, அப்பா, தங்கச்சி, தம்பி - என

உறவாட முடியாது..!


முத்தான உறவுகளை மூச்சுக்குள்ளே

அழுது புதைத்து விடிவை எண்ணி

நாட்களை நரகத்திற்குள் நகர்த்துகிறார்கள்

தெரியுமா உனக்கு?

சிறையிலிருந்து எம்மவரை விடுவித்து உன் கோழைத்தனத்தை களைந்தெறி.


விடுதலை செய் அரசே விடுதலை செய்.

அணிவகுப்பு நாளை ஆயுத அணிவகுப்பாகவும் உருவெடுக்கலாம் .

தமிழ் நதி

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019