தினகரனை சந்திக்க மறுக்கும் சசிகலா..! அ.ம.மு.கவில் உச்சகட்ட குழப்பம்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தன்னை சந்திக்க தினகரனுக்கு அனுமதி கொடுக்காமல் சசிகலா இழுத்தடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலா கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் உள்ள நிலையில் அவரை 15 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் தினகரன். ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் மிகவும் பிசியாக இருந்த கால கட்டத்தில் கூட பெங்களூர் சென்று சசிகலாவை சந்திப்பதை மட்டும் தினகரன் தவிர்த்தது இல்லை. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சசிகலா இருக்கும் சிறை பக்கமே செல்லாமல் இருந்து வருகிறார் தினகரன். 

இதற்கு காரணம் தினகரன் சந்திக்க வேண்டும் என்றால் அதற்கு சசிகலா அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால் தற்போது வரை தினகரனை சந்திக்க சசிகலா அனுமதி கொடுக்காமல் இருந்து வருகிறாராம். நாடாளுமன்ற தேர்தல் வியூகத்தில் தனது பேச்சை கேட்காமல் செயல்பட்ட தினகரன் மீதான அதிருப்தியில் சசிகலா மிக கடுமையான கோபத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். 

ஆர்.கே.நகரில் ஜெயித்தது போல் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்துவிடலாம் என்று தினகரன் கூறிக் கொண்டிருப்பது பகல் கனவு என்று சசிகலா நம்புகிறார். காங்கிரசுடன் எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பது தான் சசிகலாவின் எண்ணமாக இருந்தது. ஆனால் அதற்கான முயற்சியில்  தினகரனுக்கு தோல்வியே கிடைத்துள்ளது. இதனால் தனித்து போட்டி என்று தினகரன் தன்னிச்சையாக அறிவித்ததை சசிகலா ரசிக்கவில்லை என்கிறார்கள். கட்சியின் பொதுச் செயலாளர் என்று தன்னை கூறும் நிலையில் தனித்து போட்டி என்று தினகரன் எப்படி தனியாக முடிவெடுத்து அறிவிக்கலாம் என்று ஏகப்பட்ட ஆத்திரத்தில் உள்ளாராம் சசிகலா. 

மேலும் தேர்தல் சமயத்தில் பெங்களூர் சிறை வசதிகள் தொடர்பான பிரச்சனை பூதாகரமாகியுள்ளதால் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க தினகரன் எள் அளவும் முயற்சிக்கவில்லை என்கிற கோபமும் சசிகலாவுக்கு இருப்பதாக சொல்கிறார்கள். பெங்களூர் புகழேந்தி தான் இந்த பிரச்சனையை கவனித்து வருகிறாராம். இந்த நிலையில் தேர்தல் இன்னும் 10 நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தினகரன் எடுக்கப்போகும் முடிவு தான் சிறையில் இருந்து வெளியான பிறகு தனது அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்பது சசிகலாவுக்கு தெரியும். அப்படி இருந்தும் தினகரனை சந்திக்க கூட சசிகலா மறுப்பது அவர் வேறு ஏதோ வியூகம் வைத்திருப்பதற்கான காரணம் தான் என்று கூறுகிறார்கள்.

 

விரைவில் சசிகலாவை சிறையில் சந்தித்து பேச அ.தி.மு.கவின் முக்கிய புள்ளி ஒருவர் தீர்மானித்துள்ளதாக ஒரு பேச்சு நிலவுகிறது. சசிகலா தரப்பில் இருந்து வந்த சிக்னலை தொடர்ந்தே அந்த புள்ளி அதற்கான ஏற்பாட்டை செய்து வருவதாகவும் கூறுகிறார்கள். இந்த புள்ளி தான் குடியரசுத் தலைவர் தேர்தல் சமயத்தில் அ.தி.மு.க எம்.பிக்களின் ஆதரவை பா.ஜ.கவிற்கு பெற்றுக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019