வெனிசுவேலாவில் கடும் மின்சார தட்டுப்பாடு: 15 சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்தனர்

தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவின், மருத்துவ சிகிச்சையளிக்க முடியாத நிலையில் இருந்த 15 சிறுநீரக நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று மற்றும் நேற்று முன் தினம் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

வெனிசுவேலாவில் தற்போது 10 ஆயிரத்து, 200சிறுநீரக நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் கடும் மின்சார தட்டுப்பாடு காரணமாக அங்குள்ள, ‘டயாலிசிஸ்’ எனப்படும் சிறுநீர் சுத்திகரிப்பு சிகிச்சை மையங்கள் முழுவதுமாக முடங்கியுள்ளன. இதன் காரணமாக நோயினால் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி இருந்த  சிறுநீரக நோயாளிகள் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெனிசுவேலா நாட்டில், அரசியலில் ஸ்திரமற்ற நிலை தொடர்வதால் , மின் உற்பத்தி உட்பட பொருளாதார நிலை மோசமாக பாதிப்படைந்து வருகிறது. இதனால், அந்நாட்டின் மேற்கு பகுதிகளான பரீனாஸ், தச்சீரா, ஷூலியா உட்பட, நாட்டின் பெரும் பாலான பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சார சேவைத்தடை நீடித்தது என வெனிசுவேலா அதிகாரிகள் தெரிவித்தனர். எப்போதும் இல்லாத அளவில் தற்போது நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. இந்நிலையில், வெனிசுவேலா மின்சார சேவையை வழமை நிலைக்குக் கொண்டு வர முயன்று வருகின்றோம் என அதிகாரிகள் மேலும்  கூறியுள்ளனர்.

அரசியலில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினால் வெனிசுவேலா மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாடானது அம்மக்களை அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ பதவி வகிக்கும் நிலையில் வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும், தேசிய சட்டமன்றத் தலைவருமான ஜூவான் குவைடோ தம்மை இடைக்கால ஜனாதிபதியாக அறிவித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019