கிம் ஜோங் நம்மின் கொலை வழக்கு: வியட்நாம் பெண்ணின் குடும்பத்தினர் கவலை

கிம் ஜோங் நம்மின் கொலை வழக்கில் தமது மகளை விடுதலை செய்ய மறுப்பது நியாயமற்றது என வியட்நாம் பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கிம் ஜோங் நம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தோனேஷியா பெண் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வியட்நாம் பெண் ஹுவோங் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது குடும்பம் தமது வருத்தத்தை இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன்-இன் சகோதரர் கிம் ஜோங் நம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.இந்நிலையில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்பட்டு வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவை சேர்ந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மலேசிய நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் இந்தோனேஷியா பெண் சிட்டி ஆயிஷாவின் குற்றசாட்டு மீளப்பெறப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கைதான வியட்நாமை சேர்ந்த பெண் டோவன் தி ஹுவோங்கை விடுதலைச் செய்யுமாறு கடந்த செவ்வாய்க்கிழமை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டது. எனினும் அவரை விடுவிக்க முடியாதென விசாரணைகளை முன்னெடுக்கும் மலேசிய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு மலேசிய கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங் நம் முகத்தில் விஎக்ஸ் இரசாயண பொடியை தூவியதாக இந்த இரண்டு  பெண்களும் தடுத்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019