பொளந்து கட்டும் குயிண்டன்-டி-காக்.. கண்ணீர் வராத குறையாக கதறும் இலங்கை!

இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் குயிண்டன் டி காக் மீண்டும் அசத்த, தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை அணி வரலாறு படைத்து சாதித்தது. இந்நிலையில் தற்போது அந்த அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. 

நாலும் தோல்வி: 

முதல் மூன்று போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வென்றது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய நான்காவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி, முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. உதனா ஆறுதல்: 

இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு பெர்னாண்டோ (29), குசல் மெண்டிஸ் (21), தனஞ்சயா டி சில்வா (22) ஆகியோர் தவிர மற்ற யாரும் களத்தில் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. 

அந்த அணியின் உதனா கடைசி நேரத்தில் 78 ரன்கள் அடித்து ஆறுதல் அளிக்க, இலங்கை அணி 39.2 ஓவரில், 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

குயிண்டன் அபாரம்: 

சுலப இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்க வீரர் குயிண்டன் டி காக் (51) அரைசதம் அடித்து கைகொடுத்தார். இவர் கடைசியாக பங்கேற்ற 9 இன்னிங்சில் இவர் அடித்த 8வது அரைசதம் இதுவாகும். தொடர்ந்து வந்த டுபிளசி (43), மார்க்ராம் (29) நிலைக்கவில்லை. அடுத்துவந்த டுமினி (31*), மில்லர் (25*) அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.

இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி, 32.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்க அணி, 4-0 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி, வரும் 16ம் தேதி கேப்டவுனில் நடக்கிறது. 

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019