காணாமல் போனவர்களின் உறவுகள் மீது பாலியல் துன்புறுத்தல்: அமெரிக்கா தெரிவிப்பு

காணாமல்போன தங்கள் கணவன்மார்கள் குறித்து தகவல்களை கோரிய மனைவிமார் அரசாங்க அதிகாரிகளாலும் பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகளாலும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என தகவல் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள் 2018 இல் உலக நாடுகளின் மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

ஶ்ரீலங்காவின் மனித உரிமை நிலவரம் குறித்து நீண்ட அறிக்கையை முன்வைத்துள்ள அமெரிக்கா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. 

ஶ்ரீலங்கா அரசாங்கமோ அல்லது அதன் முகவர்களோ சட்டவிரோத படுகொலைகளில் ஈடுபட்டனர் என தகவல்கள் கிடைத்துள்ளளன என அமெரிக்காவின் அறிக்கையி;ல் தெரிவிக்கப்பட்டுள்ளது

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல்போதல் என்பது இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படுகின்றது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை தொடர்பில் வருட இறுதிவரை அதிகாரிகள் எவருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரவதை உட்பட ஈவிரக்கமற்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தண்டனைகளை இலங்கையின் அரசமைப்பும் சட்டமும் தடை செய்துள்ள போதிலும் அதிகாரிகள் அதனை தொடர்ந்து பின்பற்றுக்கின்றனர் என அமெரி;க்கா தனது மனித உரிமை அறி;க்கையில் தெரிவித்துள்ளது.

குற்றங்கள் தொடர்பான வாக்குமூலங்களை பெறுவதற்காக காவல்துறையினர் பொதுமக்களை சித்திரவதை செய்வதுடன் பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்குகின்றனர் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 2017 இல் ஶ்ரீலங்கா அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்வதை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்த போதிலும் எனினும் கடந்த வருடம் ஶ்ரீலங்கா  அரசாங்கம் ஆகக்குறைந்தது நான்கு பேரையாவது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் சித்திரவதைகளை வழமையான நடைமுறையாக நாடுமுழுவதும் பின்பற்றுகின்றனர் என தெரிவித்துள்ள ஶ்ரீலங்காவின்  மனித உரிமை ஆணையகம் கடந்த யூன் மாதம் வரை உடல்உள சித்திரவதைகள் குறித்து 193 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது எனவும் அமெரிக்காவி;ன அறிக்கை தெரிவித்துள்ளது

மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வின் போது இலங்கை முழுவதும் சித்திரவதைகள் பரவலாக பின்பற்றப்படுவது தெரியவந்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை போன்று யுத்தம் முடிவடைந்த பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நபர்கள் தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பலவந்தமாக வாக்குமூலம் தங்களிடமிருந்து பெறப்பட்டதாகவும்,சட்டத்தரணிகளையும் குடும்பத்தவர்களையும் பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர் என அமெரிக்க அறிக்கை தெரிவித்துள்ளது

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட சித்திரவதைகள் மோசமாக நடத்தப்படுதல் போன்றவற்றை புனர்வாழ்வு முகாம்களிலும் விடுதலையின் பின்னரும் தாங்கள் அனுபவித்ததாக குறிப்பிட்டுள்ளனர் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019