நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது அறிக்கை : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?

சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரது அறிக்கையினை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவின் பொய்மையை வெளிப்படுத்தியும், மனிதவுரிமைப் பேரவை அதன் நடவடிக்கையை முடுக்கி விட வலியுறுத்தியும் அதன் அறிக்கை அமைந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தும் வகையில் விவகாரத்தினை ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்பிவைக்க ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அராசங்கம் மீளவும் தனது கோரிக்கை முன்வைத்துள்ளது.

ஆணையாளரது சிறிலங்கா தொடர்பிலான அறிக்கை தொடர்பில், நிலைமாறுகால நீதி, பொறுப்புக்கூறல், மனித உரிமைகள், மீள்குடியேற்றம் உட்பட சிறிலங்காவின் நடப்பாடுகள் தொடர்பிலான மதிப்பீட்டுகளுடன் விரிவான அறிக்கையொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ளார்.

ஐ.நாவின் 30-1 தீர்மானத்தில் எடுத்துரைக்கப்பட்ட சிறப்பு நீதிப்பொறிமுறையை தோற்றுவிக்கும் கடப்பாட்டை சிறிலங்கா நிறைவேற்றத் தவறி விட்டதாக ஐ.நா ஆணையாளர் கண்டறிந்ததோடு, சிறிலங்கா அதிபர், பிரதமர் இருவருமே 30-1 தீர்மானத்தின் நெறிகள் தொடர்பில் பின்வாங்கும் வகையில் எந்த நீதிப்பொறிமுறையிலும் பன்னாட்டுப் பங்கேற்பு இருக்காது என்று திரும்பத் திரும்பக் கூறியிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆணையாளர் பசலே அம்மையார் அவர்கள தனது அறிக்கையின் 51வது பத்தியில் குறிப்பிட்டவாறு,  'கடுமையான குற்றங்கள் செய்தவர்கள் பாதுகாப்புப் படைகளுடன் அல்லது பிறவகை அதிகாரப் பதவிகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கும் போது அவர்கள் மீது வழக்குத் தொடுக்க அல்லது அவர்களைத் தண்டிக்க அரசுக்கு வல்லமையும் மனத்திட்பமும் உள்ளதா என்பது தொடர்பான கவ்வலைகள் நீடிக்கின்றன.' என்ற ஆணையாளரதுஇந்தப் பார்வையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்கிறது எனவும் வி.உருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார். 

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது : 

1 - சிறிலங்காவின் நிலமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புவது உட்பட ஒரு பன்னாட்டுப் புலனாய்வுப் பொறிமுறையை நிறுவுவதற்கு மனிதவுரிமைப் பேரவை தீர்மானம் இயற்ற வேண்டும்.

மனிதவுரிமைப் பேரவையில் வரவிருக்கும் தீர்மானமானது,  யூகோஸ்லாவியாவுக்கான குற்றத் தீர்ப்பாயம் அல்லது ருவாண்டாவுக்கான பன்னாய்டுக் குற்றத் தீர்ப்பாயம் போன்ற ஒரு தற்சார்பான தீர்ப்பாயத்தை நிறுவ வேண்டும் அல்லது ஐ.நா பாதுகாப்பு மன்றம் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு ரோம் சட்டத்தின் உறுப்பு 13இன் படியான அதன் அதிகாரத்தை ஒட்டி, வழக்கை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

2) மனிதவுரிமைப் பேரவை சிறிலங்காவின் குற்றச் சான்றுகளைப் பாதுகாக்க தற்சார்பான நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.

மனிதவுரிமைப் பேரவை சிறிலங்காவுக்கென்று தற்சார்பான நடுநிலையான  பன்னாட்டுப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. சிறிலங்கா அரசாங்கத்திடமும், மற்ற அரசுகளிடமும். மனிதவுரிமை உயராணையர் அலுவலகத்திடமும், குடியியல் சமூகச் செயற்பாட்டாளர்களிடமும் இருக்கும் குற்றச் சான்றுகள் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமோ, அனைத்தளாவிய மேலுரிமையின் கீழ் மற்ற  நாட்டு நீதிமன்றங்களோ பயன்படுத்திக் கொள்வதற்குப் பாதுகாக்கபபடும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019