பாடசாலைகளின் பிரச்சினைகளை ஒரு நொடியில் தீர்க்க முடியாது


நீண்டகால பிரச்சினைகளை ஒரு நொடியில் தீர்க்க முடியாதென்றும் பாடசாலை அதிபர்களின் 750 ரூபா கொடுப்பனவை 6500 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகவும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு தொழி நுட்ப உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்றுக் காலை கல்வியமைச்சில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆசிரியர்கள் அதிபர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு கருத்து தெரிவித்த கல்வியமைச்சர்,

2015ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் ஒருவரின் சம்பளம் 16,100 ரூபாவாக இருந்துள்ளது. தற்பொழுது இத்தொகை 33, 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 33 சதவீத அதிகரிப்பாகும்.

அதிகமான மாணவர்கள் கற்கும் பாடசாலைக ளின் கல்வி நடவடிக்கை களுக்காக பதிவாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்பிக்கப்பட்டுள் ளது.

பாடசாலைகளில் டிஜிட்டல் வகுப்பறைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள து. புதிய தொழில்நுட்பத்தின் ஊடாகவே கல்வி நடவடிக்கையை முன்னெடுத்து

வருகின்றோம். 59 ஆயிரம் அதிபர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர். 750 ரூபாவாக இருந்த கொடுப்பனவை 6500 ரூபா வரையில் அதிகரித்துள்ளோம். அரசாங்க சேவையில் ஆகக் கூடுதலான ஊழியர்கள் கல்வித் துறையிலே பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு தொழில்நுட்ப உபகரணங்களை வழங்கும் திட்டம் கல்வி அமைச்சரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க கடந்த வருடத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 142 பாடசாலைகளுக்கு 70 மில்லியன் ரூபா பெறுமதியான மடி கணினிகள், பிரதி எடுக்கும் இயந்திரங்கள், அச்சு இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களும் நேற்று வழங்கப்பட்டன. 

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019