மலேசியாவில் நச்சு இரசாயனக் கசிவு: 2,700-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

மலேசியாவில் உள்ள பாசிர் கூடாங் எனும் பகுதியில் ஏற்பட்ட நச்சு இரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,700-க்கும் மேல் அதிகரித்துள்ளது.

பாசிர் கூடாங்கில் நேற்று(வியாழக்கிழமை) நச்சு இரசாயனக் கசிவு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றுப் பிற்பகல் வெளியான தகவல்களின் படி, 7 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாசிர் கூடாங்கின் இரண்டு வைத்தியசாலைகளில் கிட்டத்தட்ட 1,900 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.ஏனைய வைத்தியசாலைகளில் மேலும் சுமார் 860 பேருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

நச்சு இரசாயனக் கசிவால் பலரும் மருத்துவச் சிகிச்சை நாடி வருகின்றனர். சுவாசப் பிரச்சினை, மயக்கம், வாந்தி போன்றவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாசிர் கூடாங்கில் உள்ள 111 பாடசாலைகளையும் மூடுவதற்கு மலேசியக் கல்வி அமைச்சு நேற்று உத்தரவிட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 92 பாலர்பாடசாலைகளும்  மூடப்பட்டுள்ளன.

அங்கு அவசரநிலையை அறிவிப்பதற்கான தேவை இல்லை என அந்நாட்டுப் பிரதமர் மகாதீர் முகமது கூறியிருக்கிறார்.இருப்பினும் நிலைமையைக் கவனமாகக் கையாளுமாறு அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக்கொண்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு மகேந்திரா செல்வரூபன்
திரு மகேந்திரா செல்வரூபன்
யாழ். உடுப்பிட்டி
லண்டன்
23 JUN 2019
Pub.Date: June 25, 2019
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
திருமதி அன்னலட்சுமி விசுவலிங்கம்
யாழ். தெல்லிப்பழை
கனடா Toronto
21 JUN 2019
Pub.Date: June 24, 2019
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
திரு பெரியதம்பி வேலாயுதபிள்ளை
யாழ். இணுவில்
கனடா Montreal
20 JUN 2019
Pub.Date: June 22, 2019
திரு செல்வநாயகம் ரட்ணம்
திரு செல்வநாயகம் ரட்ணம்
யாழ். உரும்பிராய்
கிளிநொச்சி, கனடா
19 JUN 2019
Pub.Date: June 21, 2019
செல்வி அபி இக்னேசியஸ்
செல்வி அபி இக்னேசியஸ்
இந்தியா தமிழ்நாடு
பிரான்ஸ்
10 JUN 2019
Pub.Date: June 20, 2019
திருமதி மேரி யோசப்
திருமதி மேரி யோசப்
யாழ். அளவெட்டி
இளவாலை, டென்மார்க்
12 JUN 2019
Pub.Date: June 19, 2019