மாணவி கொலை மூடி மறைக்கும் மாணவர் ஒன்றியம்!

நேற்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் பகிடிவதையால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் வைபர் குழு ஒன்றில் கதைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் எமக்கு ஆதாரங்களுடன் செய்திகள் கிடைத்திருக்கின்றன.


அதில் இந்த சம்பவம் தொடர்பில் ஒரு மாணவர் அந்த குழுவில் செய்தி ஒன்றை பகிர்ந்திருக்கிறார். உடனடியாக சிரேஸ்ட மாணவர்கள் அந்த செய்தியை அதில் பகிர்ந்த மாணவரை எச்சரிக்கிறார்கள். அந்த மாணவனும் அந்த செய்தியை அழித்து விடுகிறார். இது உனக்கு தேவையில்லாத வேலை உன்ர வேலையை மட்டும் நீ பார். பல்கலைக்கழக பிரச்சனைகளை வெளியே கொண்டு போகத் தேவையில்லை என்றவாறான மிரட்டல்கள் விடப்பட்டதை முதலாவது படத்தில் கா

அடுத்த படத்தில் அச் செய்தியை பகிர்ந்திருந்த ஒரு ஊடகத்தின் அட்மினை கண்டுபிடிக்கேலாதா என்ற உரையாடல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஊடகவிலயலாளரைக் கண்டுபிடித்தால் அவருக்கு ஏதும் செய்யலாம் என்பதே அதன் பொருளாக இருக்கும்.

இதை எதிர்த்து யாரும் அதில் கதைக்கவில்லை. கதைத்தால் தமக்கும் பிரச்சனை வரும் என்று ஒதுங்கி விட்டார்கள் போல.

இவ்வாறு சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதைக்கு முற்றுமுழுதாக துணை போகின்றார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகின்றது. மாணவி ஒருவர் பகிடிவதையால் இறந்திருக்கிறார் என்ற விடயம் அவர்களுக்கு ஒரு சிறிய விடயமாக இருந்திருக்கிறது. அதனால் அதை கண்டுகொள்ள தேவையில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள்.

இவ்வாறவர்கள் தான் நாளை பட்டம் பெற்று சமூகத்தை வழிநடத்துவார்களா?

இவர்களுக்கு மனநல பரிசோதனை செய்யப்பட வேண்டும். இவர்கள் ஒரு வகை சைக்கோக்களாக தான் இருக்க வேண்டும்.

இது தொடர்பில் இன்னும் நிறைய ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றது. மிக விரைவில் அவைகள் வெளியிடப்பட்டு சம்பவத்தில் தொடர்புடைய அனைவரினதும் முகத்திரை கிழிக்கப்படும்.

இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் தொடர்ந்தும் மௌனமே காத்து வருகின்றதும் பல்கலைக்கழக நிர்வாகமும் வாய் மூடி மௌனமாக இருப்பதும் இவர்கள் அனைவரும் இக் கொலைகளுக்கு துணை போகின்றார்களா என்ற சந்தேகத்தை வலுவாக ஏற்படுத்தியுள்ளது.

இச் செய்தி பொய் என்றால் தாராளமாக மறுப்பு அறிக்கையை வெளியிடலாம் நாம் இதைவிட அனைத்து ஆதாரங்களுடனும் செய்தி போட தயாராக இருக்கின்றோம்!

Ninaivil

திரு செல்வராஜா குழந்தைவேலு
திரு செல்வராஜா குழந்தைவேலு
யாழ். அச்சுவேலி
கனடா
24 MAR 2019
Pub.Date: March 26, 2019
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
திரு அஜந்தன் முருகுப்பிள்ளை
யாழ். குடத்தனை
யாழ். குடத்தனை
22 MAR 2019
Pub.Date: March 25, 2019
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019