மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானம்

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது.

இந்த தீர்மானத்தை, 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி தாக்கல் செய்துள்ளது.

மேலும், இதனை நிறைவேற்ற ஐரோப்பிய யூனியனின் ஏனைய நாடுகளுடன் ஒன்றிணைந்து ஜெர்மனி செயல்பட்டு வருகின்றது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு மசூத் அசார் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்படும்.

அதேநேரம் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ள அவருக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்தும் முடக்கப்படும். எனினும், தற்போது வரை இத்தீர்மானம் மீது ஐரோப்பிய யூனியன் எந்த முடிவும் எடுக்கவில்லை.

அந்தவகையில், இத்தீர்மானத்துக்கு 28 நாடுகளும் ஒருமனதாக ஆதரவு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் ஒன்றான பிரான்ஸ் அரசு, மசூத் அசார் மீது கடந்த 15ஆம் திகதி பொருளாதாரத் தடைகளை விதித்தது.

இதன்போது, ஐரோப்பிய யூனியனின் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பட்டியலில் மசூத் அசாரை இணைக்கவும், ஏனைய நாடுகளை வலியுறுத்துவோம் என பிரான்ஸ் தெரிவித்தது.

இதேவேளை, பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா.பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு 14 நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 4வது முறையாக அந்தத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019