டி.என்.ஏ.வை 'ஹலோ' சொல்ல வைத்த மைக்ரோசாப்ட்!

மைக்ரோசாப் நிறுவனம் தானியங்கி டி.என்.ஏ. நினைவகத்தை உருவாக்கி அதில் ஹலோ என்ற வார்த்தையை பதிவுசெய்துள்ளது. 

மைக்ரோசாப் நிறுவனம் முழுதும் தானியங்கி முறையில் செயல்படும் டி.என்.ஏ. தரவுகளின் நினைவகம் (DNA Data Storage) ஒன்றைத் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டது. 

இதன் மூலம் டி.என்.ஏ. டேட்டாவை டிஜிட்டல் டேட்டாவாகவும் டிஜிட்டல் டேட்டாவை வைத்து டி.என்.ஏ. மாதிரியையும் உருவாக்கவும் முடியும். 

Nature Scientific Reports என்ற இதழில் வெளியாகியுள்ள இது குறித்த கட்டுரையில் ஹலோ (HELLO) என்ற ஆங்கில வார்த்தையை டி.என்.ஏ.வாக மாற்றி, அடுத்த 21 மணி நேரத்தில் மீண்டும் ஹலோ என்ற வார்த்தையை டிஜிட்டல் வடிவுக்கு மாற்றியதாக விளக்கப்பட்டுள்ளது.இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் இதுவரை 1GB டேட்டா டி.என்.ஏ. டேட்டாவாக மாற்றி சேமிக்கப்பட்டுள்ளது. புகைப்படங்கள், புத்தகங்கள், பாப் வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் ஆகியவை பதிவாகியுள்ளன.

இவற்றை எந்த தவறும் இல்லாமல் மீண்டும் டிஜிட்டல் வடிவில் மாற்ற முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். டிஜிட்டல் டேட்டாவில் உள்ள பைனரியை (0 மற்றும் 1) டி.என்.ஏ.வின் அங்கங்களான As, Ts, Cs மற்றும் Gs ஆகியவற்றுடன் பொருந்தும் விதமாக மாற்றி டி.என்.ஏ. வடிவம் உருவாக்கப்படும். பின் இணைப்பாக உள்ள ஆய்வக உபகரணங்கள் மூலம் வேதிப்பொருட்களைப் பெற்று டி.என்.ஏ. உற்பத்தி செய்யப்பட்டு சேமிப்புக் குடுவையில் சேர்க்கப்படுகிறது. 

இந்த ஆய்வின் அடுத்த கட்டமாக டி.என்.ஏ. டேட்டாவாக உள்ள படங்களில் இருந்து ஆப்பிள் அல்லது பச்சை நிற சைக்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும் படங்களை மட்டும் தேடிக் கண்டுபிடிக்கும் வசதி பற்றி ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. டி.என்.ஏ. டேட்டாவை டிஜிட்டலாக மாற்றாமலேயே இந்தத் தேடலை நிகழ்த்த வேண்டும் எனவும் அதற்கு டி.என்.ஏ. டேட்டாவின் மூலக்கூறுக்களையே பயன்படுத்த வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தங்கள் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். 

Ninaivil

திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
யாழ். கைதடி
கனடா Scarborough
10 JUN 2018
Pub.Date: June 10, 2019