தேனீக்களுக்காக 124 ஏக்கர் பண்ணையை அர்ப்பணித்த பிரபல நடிகர்!

லாஸ் ஏஞ்சல்ஸ், மார்ச்.23- புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்- இயக்குனர் எனப் பன்முகத் திறன் கொண்ட மோர்கன் பிரீமென் தற்போது “தேனீக்களின் பாதுகாவலன்” என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.

புகழ்பெற்ற திரைப்படங்களில் நடித்தவர் அமெரிக்கா நடிகரான மோர்கன் பிரீமென். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். காட்டுத் தேனீக்களை பாதுகாப்பதால் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்று பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.

இந்நிலையில் மிச்சிசிப்பி நகரில் உள்ள தமது 124 ஏக்கர் பண்ணையை தேனீக்கள் சரணாலயமாக மாற்றியிருக்கிறார். தேனீக்கள் இனத்தைப் பெருக்கும் விதமாக ஆர்கன்சாஸ் பண்ணையிலிருந்து 26 தேனீ ரகங்களைச் சமீபத்தில் இறக்குமதி செய்துள்ளார்.

பண்ணையில் உள்ள தேனீக்களின் அன்றாடச் செயல்பாடுகளை எந்த இடர்பாடும் இல்லாமல் மேற்கொள்ள வைக்கிறார். அது மட்டுமின்றி தேனிக்களிடமிருந்து தேனை எடுப்பதில்லை.

இது தொடர்பாக பேசிய மோர்கன், அழிந்து வரும் தேனீக்களை மீண்டும் இந்தக் கிரகத்திற்குள் கொண்டு வருவதற்கும் நம் அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என் பண்ணையில் தேனீக்கள், தேன் எடுக்க ஏற்ற செடிகளை வளர்க்கிறேன்.

அவற்றுடன் இருந்து தேனை நான் எடுப்பதில்லை. தேன் கூடுகள் அமைக்கும் பணிகளை நேர்த்தியாக மேற்கொண்டு வருகிறது.

மேலும் என் பண்ணையில் உள்ள தேனிக்கள் என்னை இதுவரை கொட்டியதே இல்லை என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் 2015-2016 ஆண்டு இடைவெளியில் தேனீக்களின் எண்ணிக்கை 44 விழுக்காடுகுறைந்துவிட்டதாக ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இது ஒரு பேரழிவு எனவே என் பண்ணையைத் தேனீக்களின் கூடாக மாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார் மோர்கன்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019