தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்யும் பழமை வாய்ந்த அதிசயத் தீவு…!!

சுற்றுலா என்பது நம்மை மகிழ்விப்பதோடு நில்லாமல், நம் வரலாற்றை அறியவும் பயன்படுகிறது. வெறுமனே பொழுதுபோக்குக்காக சுற்றுலா செல்வது இல்லாமல், நம் நாட்டின் ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும்போதும் அந்த இடத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள இது நமக்கு ஏதுவாக இருக்கும். அப்படி நாவலன் தீவு எங்கே இருக்கிறது என்பது பற்றியும், தமிழர்களின் இருபதாயிரம் வருட வரலாறு பற்றியும் இந்த பதிவில் காண்போம்.

அழிந்து போன குமரிக்கண்டத்தில் ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழு பின்பலை நாடு, ஏழு குன்றநாடு, ஏழு குனக்கரை நாடு, ஏழு குரும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகள் இருந்ததாக நம்பப்படுகிறது. இவற்றில் இருக்கும் மிச்சம்தான் தமிழ்நாடு என்று கூறப்படுகிறது. அப்படி பார்க்கையில் நாம் பேசி வரும் தமிழ், ஆதி தமிழின் மிச்ச மீதி என்றே சொல்லலாம்.

இப்போது இருக்கும் மதுரை நகரம் வடமதுரை என்று பண்டைய காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது. அப்போது தென்னகத்தே இன்னொரு மதுரையும் இருந்திருக்கிறது. அது தென் மதுரை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. கிமு 4440ல் 4449 புலவர்களுடன் சிவன், முருகர், அகத்தியர் ஆகிய மன்னர்கள் இணைந்து உருவாக்கிய பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் தமிழர்களின் வாழ்வியல் பற்றியும் பண்பாடு பற்றியும் கூறியதாக நம்பப்படுகிறது. ஆனால் இதில் ஒரு நூல் கூட தற்போது இல்லை.

நக்கீரர் இறைனார் அகப்பொருள் எனும் நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் தொடர்ந்து 9990 வருடங்கள் நடைபெற்றதாக கூறியுள்ளாராம்.

அப்படியானால் தமிழின் தொன்மை 20 ஆயிரம் வருடங்களுக்கு மேல் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இரண்டாம் தமிழ்ச்சங்கம் கிமு 3700ல் 3700 புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்களை இயற்றியது.

கிமு 1850ல் 449 புலவர்களுடன் அகநூனூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறல் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளது. அவ்வளவு பழமையான நூல்கள் இன்றைய மதுரையில் இயற்றப்பட்டுள்ளது.

திருக்குறளைவிட, தொல்காப்பியத்தை விட பழமையான நூல்கள் தமிழில் இருந்திருக்கின்றன என்பது சாதாரண நம்பிக்கை மட்டுமன்று, பல தங்களது கூற்றாக வெளிப்படுத்தும் உண்மையும்கூட.

மதுரைக்கு அருகில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த திருச்சுழி ஆகும். இது யோகி ரமண மஹரிஷி அவதரித்த கிராமம் என்பதால் ஒரு புனிதத்தலமாக கருதப்படுகிறது. 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த யோகிகளுள் ஒருவராக ரமணமஹரிஷி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. அவரது நினைவாக இக்கிராமத்தில் ஸ்ரீ ரமணர் ஆஷ்ரமம் அமைக்கப்பட்டிருக்கிறது. சிவபெருமானுக்கான ஒரு புராதனக்கோயில் ஒன்றும் இக்கிராமத்தில் உள்ளது.

ஆன்மீக அமைதிச்சூழலை விரும்பும் பயணிகளுக்கு இந்த கிராமம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். இந்த ஊருக்கு ஆயிரம் வயது இருக்கலாம். ஏன் அதற்கு மேலும் இருக்கலாம்.

மதுரைக்கு வெகு அருகில் 8 கி.மீ தூரத்தில் திருப்பரங்குன்றம் எனும் முருகன் கோயில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மலைப்பாறை குன்றின்மீது பிரசித்தமான முருகன் கோயில் அமைந்துள்ளது.

முருகன் கோயில் தவிர ஹஸ்ரத் சுல்தான் சிகந்தர் பாதுஷா ஷஹீத் எனும் தர்க்காவும் திருப்பரங்குன்றத்தில் உள்ள முக்கிய ஆன்மீக அம்சமாக பிரசித்தி பெற்றுள்ளது. முருகப்பெருமானுக்கான அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் கோயில் ஒரு பாறைக்குன்றை குடைந்தாற்போன்று அமைக்கப்பட்டிருப்பது தனித்தன்மையான அம்சமாகும். எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்தக்கோயிலில் சிவன், விஷ்ணு மற்றும் துர்க்கா போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம். சந்திரனையும் சூரியனையும் ஒரே நேரத்தில் தரிசிக்க உதவும் ஸ்தலமாக அமைந்திருப்பதும் இந்த கோயிலின் விசேஷமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், முருகப்பெருமானின் திருமணம் இக்கோயிலில் நடைபெற்றதாக நம்பப்படுவதால் திருமண சுபதினங்களில் இங்கு ஏராளமான திருமணசடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

 மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான இந்த திருமலை நாயக்கர் மஹால் 16ம் நூற்றாண்டில் நாயக்க வம்ச மன்னரான திருமலை நாயக்கரால் இந்தோ சராசனிக் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனை மாளிகையில் தற்போது பயணிகளுக்காகவே சிலப்பதிகார இலக்கியம் மற்றும் திருமலை நாயக்கர் குறித்த ஆவண விளக்கபடக்காட்சிகள் நிகழ்த்தப்படுகின்றன.

58 அடி உயரம் உள்ள 248 தூண்கள் இந்த அரண்மனையில் அமைந்துள்ளன. மாளிகையின் கூரையில் விஷ்ணு மற்றும் சிவனைப்பற்றிய ஐதீக புராணக்காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டுள்ள இந்த அரண்மனையில் ஸ்டுக்கோ பாணி அலங்கார அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் மரச்சாமான்களையும் இந்த அரண்மனையில் காணலாம். அரண்மனை முகப்பு, நாட்டிய அரங்கம் மற்றும் பிரதான மண்டபம் போன்றவை இந்த அரண்மனையின் முக்கிய அம்சங்களாக பிரசித்தி பெற்றுள்ளன. 1860-70ம் ஆண்டுகளில் இந்த அரண்மனை மாளிகை ஆங்கிலேயரால் புதுப்பிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 1000 தூண் மண்டபத்தில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 1200 ஆண்டு பழமையான இக்கோயில் பற்றிய வரலாற்றப்பின்னணி மற்றும் ஹிந்து ஆன்மீக மரபு தொடர்பான பல அம்சங்களை இந்த அருங்காட்சியகத்தில் பயணிகள் காணலாம்.

திராவிட சிற்பக்கலை மரபு குறித்த ஆழமான புரிதலையும் இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இங்கு ஏராளமான சிலைகள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. கோயில் காலை 6 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை திறந்திருப்பதோடு இந்த அருங்காட்சியகத்தை இரண்டு மணி நேரத்தில் சுற்றிப்பார்த்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்து ஆன்மீகப்பாரம்பரியத்தில் நம்பிக்கை கொண்டோர் இந்த அருங்காட்சியகத்திற்கு தவறாமல் விஜயம் செய்வது சிறந்தது.

மஹாவிஷ்ணுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் இந்த அழகர் கோயிலானது மதுரை மாநகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் சோலைமலை அடிவாரத்தில் வீற்றுள்ளது. இக்கோயில் பல நுணுக்கமான கற்சிற்ப வேலைப்பாடுகளுக்கும் கலையம்சம் பொருந்திய சிலைகளுக்கும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கல்லால் ஆன ஒரு பிரமாண்ட விஷ்ணு சிலையை இங்கு பக்தர்கள் தரிசிக்கலாம்.

வெவ்வேறு கோலத்தில் காட்சியளிக்கும் விஷ்ணுவின் சிலைகளையும் இங்கு பார்க்கலாம்.தென்னிந்தியாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த கூடல் அழகர் கோயில் ஒரு வைணவத்திருக்கோயிலாகும். இங்கு மஹாவிஷ்ணுவின் திருவுருவம் கோயிலுக்கு எதிரிலேயே பிரமாண்டமாக வடிக்கப்பட்டிருக்கிறது. நகரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ள இந்த கோயிலில் மஹாவிஷ்ணு நின்ற, அமர்ந்த மற்றும் சாய்ந்த நிலைகளில் காட்சியளிக்கின்றார்.

ராமர் பட்டாபிஷேகத்தை சித்தரிக்கும் மரச்சிற்ப அலங்கரிப்புகளையும் இக்கோயிலில் பார்க்கலாம். ஒன்பது கிரகங்களை குறிக்கும் நவக்கிரக தெய்வச்சிலைகளும் இதில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன.

பொதுவாக நவக்கிரக விக்கிரகங்கள் சைவத்திருக்கோயில்களில் மட்டுமே காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மதுரைக்கு விஜயம் செய்யும் ஆன்மீகப்பிரியர்கள் தவறாது தரிசிக்க வேண்டிய கோயில்களில் கூடல் அழகர் கோயில் ஒன்றாகும்.

Ninaivil

திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
யாழ். கைதடி
கனடா Scarborough
10 JUN 2018
Pub.Date: June 10, 2019