இயற்கையும்,தொன்மையும் நிறைந்த கௌதாரிமுனையை பாதுகாப்போம்: அங்கஜன் இராமநாதன்

பூநகரி பிரதேச பரப்பில்  கௌதாரிமுனையில் சோழர் காலத்து மண்ணித்தலை சிவன் ஆலயம் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது  விசேடமாக மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு நில பரப்பிற்கும் கடல் பரப்பிற்கும் இடையிலான தூரமாக 2 கிலோ மீற்றர் அழகிய மணல் திட்டு பரப்பாக காணப்படுகின்றது

எனவே மண் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு  ஒரு பெரிய நிலப்பரப்பு கடல் காவு கொள்ளும் நிலைமையினையும் நாம் தவிர்த்துகொள்ளலாம் விசேடமாக கண்டல் தாவரங்கள்,மணல் மேடுகள்,பனைகள் என சுற்றுலா பிரதேசத்துக்குரிய சிறப்புக்களை கௌதாரிமுனை பிரதேசம் கொண்டுள்ளது  இப் பிரதேச மக்கள் விவசாயம், கடல் தொழில் மற்றும் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாக கொண்டுள்ளதோடு

இப் பிரதேசத்தை பாதுகாத்து சுற்றுலா பிரதேசமாக மேம்படுத்தினால் பிரதேச மக்களும் வருமானங்களை ஈட்டக்கூடியதாக இருக்கும்   எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்  பள்ளிகுடாவிலிருந்து ஞானிமடம் வரையிலான கடற்கரை பகுதியில், அமைக்கப்பட உள்ள காற்றாலை தொடர்பாகவும் , பிரதேச மக்களின் சாதக மற்றும் பாதகமான நிலைமைகள் தொடர்பான கருத்துக்களை நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கேட்டறிந்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தார்

115 குடும்பங்கள் 386 பேர் வரையிலானோர் வசிக்கும் கௌதாரிமுனை கிராமம் வளமாக்கப்பட வேண்டும்  அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் ஆரம்ப காலங்களில் வசித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது  தொன்மையும் இயற்கை அழகும் உள்ள பிரதேசம் விடயத்திற்கு பொறுப்பானவர்கள் நடவடிக்கைகள் எடுக்க உறுதி செய்யப்படும்  அதேவேளை இந்து மதத்தின் தொன்மை,பழமை,அருமை,பெருமைகளை உலகறிய செய்வோம்  ஆரம்ப காலத்தில் பூநகரி இராச்சியமாக இருந்து இன்று நிலையிழந்து,கலையிழந்திருக்கும் கௌதாரி முனையினை களங்கம் இன்றி பாதுகாப்போம்

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019