பால் விலையை அதிகரிக்க வேண்டும்

இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகளை அதிகரித்தது போலன்று  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலின் விலையையும் அரசாங்கம் அதிகரித்து பால் உற்பத்தியாளர்களை  ஊக்கப்படுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான கணபதி கனகராஜ் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

ஊடகச் சந்திப்பொன்றிலே அவர் இக்கோரிக்கையை விடுத்தார். இது பற்றி அவர் தெரிவித்ததாவது,

பால்மா இறக்குமதிக்காக அரசாங்கம் பாரிய அளவில் அந்நிய செலாவணியை செலவிடுகிறது. அத்துடன் பால்மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று காலத்திற்கு காலம் விலையையும் அதிகரிக்கின்றது.

ஆனால் வெளிநாட்டு பால்மாக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டாலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாலின் விலையை அதிகரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இதனால் எமது நாட்டின் பால் உற்பத்தி வீழ்ச்சியடையும் நிலையும் காணப்படுகின்றது. இலங்கையில் கால்நடை வளர்ப்பதற்கும், பசும் பால் உற்பத்திக்கும் உகந்த காலநிலை காணப்படுகின்றது.  

மலையகப் பெருந்தோட்டப் பகுதியில் கால் நடைகளுக்கு தேவையான உணவுகளை இயற்கையாகவே பெறக்கூடியதாகவுள்ளது.

எனினும் உள்ளூர் பால் உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. கால்நடைகளை பராமரிப்பதற்கு முறையான வைத்திய வசதிகள் இல்லாததால் பெருமளவிலான கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன.

இவ்வாறான நிலையிலேயே வெளிநாட்டு பால்மா இறக்குமதிக்கும், பால் உற்பத்திப் பொருட்களுக்கும் அதிகளவான பணம் செலவிடப்படுகின்றது. உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரித்து இறக்குமதியைக்கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மலையகத்தில் கால்நடை வளர்ப்பிற்கு ஏற்ற வளங்களை பயன்படுத்து வதில் அதிக அக்கறை செலுத்தப்படல் அவசியம்.

உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வேலையில்லாப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019