கோட்டாவின் மனு மே மாதம் 06ம் திகதி விசாரணை

கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செ்யத மனுவை மே மாதம் 06ம் திகதி விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அச்சல வென்னப்புள்ளி மற்றும் அர்ஜூன ஒபேசேக்க ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளனர். 

இந்த மனு மூலம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது, 

"டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு தவறாக அரச நிதியைப் பயன்படுத்தியுள்ளதாக தான் உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அந்த வழக்கை விசாரிப்பதற்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்து தெரிவித்த ஆட்சேபனையை நிராகரித்த கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க தீர்மானித்துள்ளது. 

இந்த தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கேட்கப்பட்ட போதும், உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி மறுப்பு தெரிவித்ததாக கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார்." 

ஆகவே உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தமையானது சட்ட விரோதமானது என்று உத்தரவிடுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Ninaivil

திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
அமரர் சுப்பிரமணியம் பார்த்தீபன்
யாழ். கைதடி
கனடா Scarborough
10 JUN 2018
Pub.Date: June 10, 2019