தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்ரீ பல்லவி – திருநங்கையாக நடித்தவர்


விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “தாதா 87” படத்தில் திருநங்கையாக நடித்த நடிகை ஸ்ரீ பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தேசிய விருதுக்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகியது.

இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார் கதாநாயகி ஸ்ரீ பல்லவி. அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்தது. இந்திய சினிமா வரலாற்றில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவி 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019