இலங்கையின் யுத்த ஒளிப்படங்களை காட்சிப்படுத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தமிழகத்தில் தடை

இலங்கையின் இறுதி கட்ட யுத்த ஒளிப்படங்களை காட்சிப்படுத்தி, தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆட்சியிலுள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர், இலங்கையின் யுத்த ஒளிப்படங்களை பிரசாரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடத்து முடிந்த யுத்தத்திற்கு தி.மு.க.வே காரணம் என தெரிவித்து அ.தி.மு.க தலைமையிலான தமிழக துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

மேலும் இவ்விடயத்தையும், தி.மு.கவின் ஊழல்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தொலைக்காட்சிகளில் மூன்று விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்த பிரசாரம் தொடர்பில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், அதன் சட்டத்துறை பிரிவால் இந்தியத் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான விளம்பரங்கள் ஊடாக, தி.மு.க மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து, குறித்த மூன்று தேர்தல் பிரசார விளம்பரங்களையும் இந்தியத் தேர்தல் ஆணைக்குழு தலையிட்டு நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுடன் காலியாகவுள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது.

அதேபோன்று புதுச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதனால் அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019