இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்: தமிழிசை பேட்டி

இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டம் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இன்று (திங்கள்கிழமை) பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழிசை பதிலளித்தார். அதன் விவரம்:இறுதிகட்ட களநிலவரம் எப்படி இருக்கிறது?

கள நிலவரம் பிரமாதமாக இருக்கிறது. நான் என்ன தைரியத்தில் தூத்துக்குடி வந்தேன் என ஸ்டாலின் கேட்கிறார். அவர்கள் என்ன தைரியத்தில் தூத்துக்குடிக்கு வந்துள்ளார்கள்? இது மண்ணின் மகளுக்கும் மற்றவர்களுக்கும் நடக்கும் போராட்டம். நான் இந்த பகுதியில் பிறந்து வளர்ந்தவள். என்னை பார்த்து இப்படி கேள்வி கேட்க எது அவர்களுக்கு காரணமாய் அமைந்தது? நான் ஒருவரை அனுப்புவேன். ஆனால், மற்றவர்கள் போட்டி போட கூடாது என்பதை ஆணவமாகத் தான் கருத வேண்டும்.

இந்த தொகுதிக்கு அதிமுகவில் 41 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால், திமுகவில் ஒருவர் கூட விண்ணப்பம் செய்யவில்லை. கனிமொழி போட்டியிடுவதால் சாதாரண தொண்டனுக்கு விண்ணப்பிக்கக் கூட உரிமையில்லை என்ற சூழல்.

எனது பிரச்சாரம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம். அன்புக்கும் ஆணவத்திற்கும் நடக்கும் போராட்டம்.

நம்பிக்கை எந்த அளவில் இருக்கிறது?

மக்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்துகின்றனர். ஊழலற்ற, சாமானியமாக பழகக்கூடிய, தன்முயற்சியால் உயர்ந்த தலைவராக என்னை கருதுகின்றனர்.

டாஸ்மாக் பிரச்சினைக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறீர்கள். மாநில அரசிடம் வலியுறுத்துவீர்களா?

ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துவிட்டோம் என்பதற்காக எங்கள் கொள்கைகளை முழுவதுமாக விட்டுவிடுவதில்லை. மதுக்கடைகள் அகற்றப்பட வேண்டும் என்பது எங்களின் கொள்கை. கூட்டணி கட்சியாக அதிமுக இருப்பதால், கோரிக்கை வைப்பதற்கு சுலபமாக இருக்கிறது. பாஜக அறிவித்துள்ள நதிநீர் இணைப்பு இந்தியாவை எங்கோ கொண்டு போய் விடப்போகிறது.

பல தலைவர்கள் இருந்த தூத்துக்குடி மண், ஒரு நிறுவனத்தாலும், கலவரங்களாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. இது துடைத்தெறியப்பட வேண்டும். தூத்துக்குடியை ஒரு தேசிய மண்ணாக பார்க்கிறேன். ஸ்டெர்லைட் ஆலையை எங்களுடன் இணைத்துப் பேசுகின்றனர். ஸ்டெர்லைட்டை ஆரம்பித்தது திமுக. அதனை விரிவுபடுத்தியது திமுக. ஸ்டெர்லைட்டில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உற்பத்திக்கு அனுமதி கொடுத்தது திமுக. அதனால் தான் நச்சுத்தன்மை வந்தது.

தமிழகத்தை ஆண்ட போதும், மத்தியில் கூட்டணியில் இருந்த போதும் திமுகவுக்கு ஸ்டெர்லைட் கண்ணுக்கே தெரியவில்லையா? இப்பொழுதுதான் தெரிந்ததா? அப்பட்டமான நாடகத்தை நடத்துகின்றனர். நச்சுத்தன்மை பரவும் எதனையும் ஒப்புக்கொள்ள பாஜக தயாராக இல்லை.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019