உதயசூரியன் சின்னத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் தலையில் விழும் குட்டு: உதயநிதி பேச்சு

உதயசூரியன் சின்னத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் தலையில் விழும் குட்டு என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு பேருந்து நிலையம் அருகில், அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து இன்று (திங்கள்கிழமை) உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:

"தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்றபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தான் இன்னும் தொலைக்காட்சி பார்க்கவில்லை என்று சொன்னார். இப்படிப்பட்ட முதல்வர் தேவையா? இப்படிப்பட்ட பிரதமர் தேவையா?

நீட் தேர்வை மறந்துவிடாதீர்கள். அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, நன்றாகப் படித்து மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். நீட் தேர்வை நம் மீது திணித்து, அந்தத் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என பொய்யைச் சொல்லி போலியாக நம்பிக்கை கொடுத்து, அனிதாவை மருத்துவராக விடாமல் தடுத்ததால், அம்மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

அனிதா யார்? நம் வீட்டுப் பெண் தானே, நம் தங்கை தானே. நம் வீட்டுப் பெண்ணுக்கு இந்த மாதிரி நடந்தால் விட்டு விடுவோமா? விடக்கூடாது. பழிக்குப் பழி வாங்க வேண்டும். பழிக்குப் பழி வாங்க வேண்டிய நாள் ஏப்ரல் 18.

உதயசூரியன் சின்னத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் தலையில் அவர் செய்த தவறுகளுக்கு நாம் குட்டுகிற குட்டு. நாம் ஜெயிக்கப் போவது உறுதி. ஆனால், என் சின்ன ஆசை. எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும். செய்வீர்களா?

நம் தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் வாங்கினால் தள்ளுபடி செய்யப்படும். இன்றைக்கோ நாளைக்கோ சென்று வாங்கி விடுங்கள். நம் தலைவர் வந்தவுடன் தள்ளுபடி செய்துவிடுவார். நான் வாஸ்தவமாகத் தானே பேசுகிறேன். திமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன். கதாநாயகன் இருந்தால் ஒரு வில்லன் இருப்பார். இந்த தேர்தலில் நம் வில்லன் மோடி. இந்தியாவின் வில்லன் மோடி. இந்த வில்லனை ஓட ஓட அடித்து விரட்ட வேண்டுமா? வேண்டாமா?".

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Ninaivil

திரு மோகனகாந்தன் கந்தையா
திரு மோகனகாந்தன் கந்தையா
யாழ்ப்பாணம்
கனடா
11 JUN 2019
Pub.Date: June 17, 2019
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
திரு முருகேசபிள்ளை தம்பிராசா
மட்டக்களப்பு
லண்டன்
14 JUN 2019
Pub.Date: June 15, 2019
திரு நடராஜா ரவிச்சந்திரன்
திரு நடராஜா ரவிச்சந்திரன்
யாழ். நாச்சிமார் கோவிலடி
டென்மார்க் Herning
11 JUN 2019
Pub.Date: June 14, 2019
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
திரு இராஜரட்ணம் நடராஜசுந்தரம்
யாழ். புலோலி
லண்டன் Wimbledon
12 JUN 2019
Pub.Date: June 13, 2019
திருமதி சூரியகுமார் தயாபரி
திருமதி சூரியகுமார் தயாபரி
யாழ். வண்ணார்பண்ணை
பிரான்ஸ் Lssy-Les-Moulineaux
06 JUN 2019
Pub.Date: June 12, 2019
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
திருமதி சாந்தமலர் ஞானசேகரம்
யாழ். உடுப்பிட்டி
சுவிஸ் Dietikon(ZH)
10 JUN 2019
Pub.Date: June 11, 2019