கோத்தபாய ராஜபக்‌ஷ வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா?

அனைத்து மக்களிடையும் தற்போது கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு பாரிய வரவேற்பு இருக்கின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் கூறியுள்ளார்.கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராவது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,கோத்தபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதி வேட்பாளராவதை சர்வதேசம் ஏற்றுகொள்ள வேண்டிய தேவை கிடையாது. இது எமது நாட்டின் உள்ளகப்பிரச்சினை. மக்கள் ஏற்றுகொள்வதே எமக்கு தேவையாகும்.

அத்தோடு, அனைத்து மக்களிடையும் தற்போது கோத்தபாய ராஜபக்‌ஷவிற்கு பாரிய வரவேற்பு இருக்கின்றது.இந்த வழக்குகள் எடுக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் நிச்சயமாக எமது கட்சிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. வழக்கு போடப்பட்டுள்ளதென்றதற்காக விசாரணைக்கு எடுத்துகொள்வதால் வேட்பாளர் தெரிவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கோத்தபாய ராஜபக்‌ஷ வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா என்பது தொடர்பில் கூறுகையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியும் அவற்றில் எதனையும் நிறைவேற்றவில்லை.

அதனாலேயே 2015, 2018 ஆம் ஆண்டுகளில் அவர்களுக்கு வாக்கு வங்கி வீழ்ச்சியைக் கண்டது.தற்போது தமிழ் மக்களுக்கு அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.வடமாகாணம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தாது ஒத்திவைப்பதற்கு எல்லை நிர்ணயத்திற்கு கூட்டமைப்பு ஆதரவளித்ததும் காரணமாகும்.

ஆகவே, இந்த நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக் கூறல் வேண்டும்.இந்த நிலையில் அரசாங்கத்துடன் கை கோர்த்துக் கொண்டு வட, கிழக்கு உட்பட தமிழ் மக்களின் வாக்குரிமையை பறித்துக் கொண்டுள்ளது. அதனால் இன்று தமிழ் மக்களுடைய மனதில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை ஏற்றுக் கொள்ளும் நிலையும் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019