8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள்: பொன். ராதாகிருஷ்ணன்

சேலம் 8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சேலம் கோட்டை மைதானத்தில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.சரவணன், தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி, கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ், நாமக்கல் அதிமுக வேட்பாளர் காளியப்பன் ஆகியோரை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரம் செய்தார்.அப்போது பேசிய அவர், ''சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் இப்பகுதிக்கு மிகவும் அவசியமான திட்டமாகும். எனவே, நிலம் கையகப்படுத்தப்படும்போது, இப்போதுள்ள விலையை விட கூடுதலாக விலை கொடுத்து, நிலம் கையகப்படுத்தப்படும். மேலும், திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு கண்டு திட்டத்தைச் செயல்படுத்துவோம்'' என்றார்.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், ''கன்னியாகுமரி தொகுதிக்கு பிரதமர் மோடி என்ன செய்தார் என்பது இங்குள்ள மக்களுக்குத் தெரியும். பிரதமர் மோடி உலக நாடுகளின் தலைவர்கள் முன்பு தலை நிமிர்ந்து பேசியவர். ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்தவர்கள் யாராவது இப்படி பேசியுள்ளார்களா?

சென்னை- சேலம் 8 வழிச்சாலையை மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் விரும்பும்போது யாரும் எதையும் தடை செய்யமுடியாது. சிலரின் தூண்டுதலால்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத்தான் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் தெளிவாகக் கூறினார்'' என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

Ninaivil

திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
திரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ். வல்வெட்டி மாடந்தை
கனடா
17 APR 2019
Pub.Date: April 20, 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
யாழ். வேலணை
ஐக்கிய அமெரிக்கா
17 APR 2019
Pub.Date: April 19, 2019
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
திரு சுப்பிரமணியம் நரேந்திரன்
யாழ். அளவெட்டி
கனடா
16 APR 2019
Pub.Date: April 18, 2019
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
திருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 17, 2019
திருமதி சுஜித்தா காண்டீபன்
திருமதி சுஜித்தா காண்டீபன்
யாழ். தொண்டமனாறு
லண்டன்
11 APR 2019
Pub.Date: April 16, 2019