தொழிற்சங்கங்கள் பின்பற்ற வேண்டிய கட்டளைச் சட்டங்கள்


நமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம் 1935 ஆம் ஆண்டின் 14ஆம் இலக்கச் சட்ட மாகும். இச்சட்டத்தில் 1946ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும், 1948 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும், 1958ஆம் ஆண்டின் 18ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும், 1970ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சட்டமானது தொழிற்சங்கங்களைப் பதிவு செய்வதற்கும் அவ்வாறு பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்கள் உரிய முறையில் செயற்படுவதை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளை செய்வதற்காகவுமான ஒரு கட்டளைச் சட்டமாகும்.

தொழிற்சங்கம் என்றால் என்ன?

குறித்த ஒரு தொழில் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது தொழில்சார் நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவற்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் ஒன்றி ணைந்து உருவாக்கிக் கொள்ளும் அமைப்பு தொழிற்சங்கமாகும்.

தொழிற்சங்கங்களின் நோக்கங்கள் வருமாறு:

(1) தொழில் செய்வோர் மற்றும் தொழில் வழங்குனர்களுக்கிடையிலும் அல்லது தொழில் செய்வோர் மத்தியிலும் தொழில் வழங்குனர் மத்தியிலும் உள்ள உறவுகளை ஒழுங்கமைத்துக் கொள்ளல்.

(2) ஏதாவது தொழில் மற்றும் வியாபாரம் நடத்துவதன் மீதான நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தல்.

(3) தொழில் செய்வோரை (அதாவது குறித்த தொழிற்சங்க உறுப்பினர்களை) தொழில் பிணக்குகளில் பிரதிநிதித்துவப்படுத்தல்.

(4) ஏதாவது ஒரு தொழிலில் கதவடைப்பு மற்றும் வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தல் செயற்படுத்தல் மற்றும் கதவடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தின்போது அதன் உறுப்பினர்க ளுக்கு கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் செய்தல் மற்றும் வேறு நன்மைகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்தல்.

ஒரு துறைசார் பணியாளர்களுக்காக தொழிற்சங்கமொன்று உருவாக்கப்படலாம். இருப்பினும் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கங்களின் சம்மேளனங்களையும் உருவாக்கலாம்.

தொழிற்சங்கங்களைப் பதிவு செய்தல்:

(அ) தொழிற்சங்கமொன்றை ஆரம்பிக்கும் போது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒழுக்குக் குறையாதிருக்க வேண்டும்.

(ஆ) அவ்வாறு ஆரம்பிக்கப்படும் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாத காலம் முடிவடைவதற்கு முன் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

(இ) அரசுத்துறை சார் பணியாளர்களும், தனியார்துறை சார்ந்த பணியாளர்களும் ஒன்றிணைந்து தொழிற்சங்கமொன்றை அமைக்க முடியாது.

(ஈ) குறித்த தொழிற்சங்கத்தின் யாப்பினால் கட்டுப்படுத்தப்படாத போது 16 வயதிற்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய ஒருவர் அத்தொழிற்சங்கத்தில் உறுப்பினராயிருக்கலாம்.

(உ) அவ்வாறு உறுப்பினராக இருப்பவர் குறித்த தொழிற்சங்கத்தின் செயற்குழு உறப்பினராக பதவி வகிக்க முடியாது.

(ஊ) குறித்த தொழிற்சங்கத்தில் பதவி வகிக்கும் அலுவலர்களில் இரண்டில் ஒரு பங்கிற்குக் குறையாதவர்கள் குறித்த தொழிற்றுறையில் பணியாற்றுபவர்களாக இருப்பது கட்டாயமாகும்.

(எ) தொழிற்சங்கமொன்றைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவம் ‘பி’ B ஆகும். அவ்விண்ணப்பப் படிவத்துடன் (1) ஆரம்பக் கூட்டத்தின் பிரமாணக் குறிப்புகள் (2) உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் ஒப்பங்கள் கொண்ட பதிவேடு (3) தொழிற்சங்கத்தின் மாதிரி யாப்பு (தொழிற்சங்கப் பதிவுக்காக விண்ணப்பிக்கும் ‘பி’ B படிவத்தையும், மாதிரி யாப்பின் படிவத்தையும் தொழில் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்)

தொழிற்சங்கமொன்றை பேணுவதுடன் தொடர்புபட்ட  படிவங்கள்:

விடயம் படிவம்

* தொழிற்சங்கத்தைப்

பதிவு செய்தல் – B

* வருடாந்த கணக்கறிக்கை – N

* அமைப்பு விதித்திருத்தம் –K

* தொழிற்சங்கத்தின்

பெயர் மாற்றம் – G

* தொழிற்சங்க அலுவலகத்தின்

முகவரி மாற்றம் – J

* பதவி நிலை அலுவலர்களின்

மாற்றம் பற்றிய அறிவித்தல் – L

* இணைத்தலுக்கான

அறிவித்தல் – H

* தொழிற்சங்கத்தைக்

கலைப்பதற்கான அறிவித்தல் – I

நீதித்துறை அலுவலர்கள், ஆயுதப்படைகளின் அலுவலர்கள், பொலிஸ் (காவல்) அலுவலர்கள், சிறைச்சாலை அலுவலர்கள், விவசாயப் படைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏதாவது படையணியில் உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து உருவாக்கிய எந்தவொரு அமைப்பும் தொழிற்சங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

பொது அலுவலர்கள் உறுப்புரிமை கொண்டுள்ள தொழிற்சங்கமொன்றில் அத்தொழில்துறை சாராத வெளியார் இருவர் அச்சங்கத்தின் உறுப்பினராக இருக்கலாம். அவர்களில் ஒருவர் அத்தொழிற்சங்கத்தின் தலைவராகவோ, செயலாளராகவோ பதவி வகிக்க முடியும்.

சமாதான அலுவலர்கள் மற்றும் அரசுப் பதவி நிலை தர அலுவலர்களின் சங்கமொன்று வேறு ஒரு சங்கத்துடன் இணைக்கப்படவோ அரசியல் ரீதியான குறிக்கோளையோ கொண்டிருத்தல் தடையாகும்.

தொழிற்சங்கமொன்றைப் பதிவு செய்யும் போது,

(அ) தொழிற்சங்கமொன்றைப் பதிவுசெய்ய விண்ணப்பிக்கும் போது அது தொழிற்சங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் அதில் கூறப்பட்ட விதிமுறைகளுக்கு முரண்படவில்லை என்பது திருப்திகரமாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும். பதிவு செய்ய விண்ணப்பிக்கும் ஏதாவது குறிக்கோள் தொழிற்சங்க சட்ட விதிகளுக்கு முரணாக இருந்தால் அத்தொழிற்சங்கம் பதிவு செய்யப்படாது நிராகரிக்கப்படும்.

(ஆ) தொழிற்சங்கக் கட்டளைச் சட்ட விதிகளுக்கேற்றதாக விண்ணப்பம் உள்ளதா என்பதைப் பதிவு செய்யும் தொழிற்சங்கக் கிளையின் ஆணையாளர் உறுதிப்படுத்திக் கொள்ளவும், அதில் திருப்தியடையவும் வேண்டும். அவ்வாறில்லாதவிடத்து திருப்தியடையக் கூடிய மேலதிக தகவல்கள் வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

(இ) பதிவு செய்யப்பட விண்ணப்பிக்கும் தொழிற்சங்கத்தின் பெயரில் ஏற்கனவே ஒரு தொழிற்சங்கம் பதிவுசெய்யப்பட்டிருப்பின் புதிதாக அதேபெயரில் பதிவு செய்ய முடியாது. அதேபோல் புதிய விண்ணப்பிக்கும் தொழிற்சங்கத்தின் பெயர் எவர் மத்தியிலாவது தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தால் பதிவு செய்யப்பட மாட்டாது. உரிய பொருத்தமான திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே பதிவு மேற்கொள்ளப்படும்.

(ஈ) பதிவு செய்ய விண்ணப்பிக்கும் தொழிற்சங்கம் தொழிற்சங்கக் கட்டளைச் சட்டம் மற்றும் அதன் கீழ் ஆக்கப்பட்டுள்ள விதிகளுக்கியைந்ததாகவுள்ளதாகவும் அதன் யாப்பு சட்டபூர்வமானது என்றும் தொழில் ஆணையாளர் திருப்திப்பட்டால் பதிவு மேற்கொள்ளத் தடையில்லை.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019