குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை பார்வையிட்டார் மாவை சேனாதிராசா

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 32பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்த 69பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 26பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளனர்.

ஐந்து பேர் வைத்தியர்களின் அனுமதியின்றி வெளியேறிச்சென்றுள்ளதுடன் இரண்டு பேர் கண்டி மற்றும் அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் 04பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.ஒருவர் மருத்துவரின் சிகிச்சைக்கு எதிராக வெளியேறிச்சென்றுள்ளதாகவும் வைத்திய பணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போது சிகிச்சைபெறும் 32பேரும் வைத்தியசாலையின் பல்வேறு விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருவதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.உயிரிழந்தவர்களின் 26 சடலங்களும் நேற்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று காலை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோரை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல்கூறினார்.

இதற்போது காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் மேலதிக தேவைப்பாடுகள் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019