பிளஸ் 2வில் சாதித்த ஏழை மாணவிக்கு சிவகார்த்திகேயன் அளித்த வாக்குறுதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணியில் மாணவி சஹானாவின் மருத்துவ கனவை தான் நிறைவேற்றுவதாக நடிகர் சிவகார்த்திகேயன் அளித்துள்ள வாக்குறுதி பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 

கடந்த மார்ச் 1-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து இத்தேர்வானது கடந்த மாதம் 19-ம் தேதி முடிவடைந்தது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19ம் தேதி வெளியானது. 

இந்தத் தேர்விலும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே 5.07 சதவிகிதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் அளவில் அதிகம் தேர்ச்சியடைந்தவர்கள் என்ற ரீதியில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வெழுதிய மாணவர்களில் 95.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணியில் மாணவி சஹானா 600 மதிப்பெண்ணுக்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் மேற்படிப்பு படிப்பு அவருக்கு வசதி இல்லாத காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.

இந்தச் செய்தியை அந்த மாணவியின் ஆசிரியரான செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.இந்த செய்தி இயக்குநர் சரவணன் மூலம் நடிகர் சிவகார்திகேயனின் காதுக்கு எட்ட, அவர் மாணவியின் மருத்துவப்படிபுக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் மாணவியின் சாதனையை பாராட்டியுள்ள இயக்குநர் நவீன், 'வாழ்த்துகள் சஹானா. இந்த 524 மதிப்பெண், நகரங்களில் பெரும்பள்ளிகளில் பெருந்தொகை கட்டி, ஸ்பெஷல் டியூஷன்கள் வைத்து, இரவு அம்மாவின் காம்ப்லான் குடித்து படித்து பரிட்சை எழுதி எடுத்த பல 590களை விடவும் மேலானதே' என்று குறிப்பிட்டுள்ளார். 

Ninaivil

திரு அனித் சதாசிவம்
திரு அனித் சதாசிவம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறை
சுவிஸ்
18 MAY 2019
Pub.Date: May 24, 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
யாழ். சாவகச்சேரி
கனடா
21 MAY 2019
Pub.Date: May 23, 2019
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
திருமதி சிவபாக்கியம் பரமசாமி
யாழ். எழுதுமட்டுவாள்
கனடா
21 MAY 2019
Pub.Date: May 22, 2019
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
திருமதி மகேஸ்வரி குருமூர்த்தி
கிளிநொச்சி வட்டக்கச்சி
கனடா
19 MAY 2019
Pub.Date: May 20, 2019
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
அமரர் சண்முகம் தவக்குமார் (நந்தன்)
யாழ் வல்வெட்டி
கனடா
17.4.2019
Pub.Date: May 17, 2019